தனியார் இணைய ஊடகம் ரங்கராஜன் நரசிம்மன் குறித்து பொய் செய்தி ஒன்றை பகிர்ந்து வசமாக சிக்கி பின்பு அதனை நீக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது, இது குறித்து ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்த கருத்து பின்வருமாறு : பொய்யான செய்தி ஒன்றை என் மீது விஷமிகள் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். இப்பொழுது அதே பொய் செய்தியை இந்த ஜாகிர் உசெய்ன் அவனை எதிர்த்தேன் என்பதற்காக ஊடகங்களில் பேட்டியில் சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
ஐ.பி.சி தமிழ் யாரை திருப்தி செய்ய வேண்டுமோ தெரியவில்லை. இந்த பொய் செய்தியை அவர்கள் யுட்யூப் சேனலில் முதல்வன் தமிழ்ச்செல்வன் என்பவர் (என்னை முன்பு ஒரு முறை பேட்டி எடுத்தவர்), துளியும் முன் விசாரணை செய்து உண்மை தன்மை உள்ளதா என்று பார்க்காமல், யாரையோ திருப்தி படுத்துகிறோம் என்று நினைத்து "இதுதான் நிதுத்வமா" என்கிற தலைப்பில் 13.12.2021 அன்று காணொளி ஒன்றை ஐ.பி.சி. தமிழ் யுட்யூப் சேனலில் வெளியிட்டார்.
இந்த ஐ.பி.சி.யின் தலைமை அமெரிக்காவில் உள்ளது. இந்த அவதூறு காணொளியை 10 நிமிடத்தில் டிலீட் செய்யவில்லை என்றால் சட்ட நடவடிக்கையை, அமெரிக்காவில் மான நஷ்ட வழக்கு போடுவதோடு, போர்ஜரி மோசடி செய்து போலி ஆவணத்தை வெளியிட்டார்கள் என்று வழக்கு தொடுப்பேன் என்று சொன்னேன்.
அந்த காணொளி டிலீட் செய்யப்பட்டு விட்டது. இன்னமும் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என குறிப்பிட்டுள்ளார், போலி செய்தியை நீக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என எச்சரிக்கை விடுத்த சூழலில் காணொளியை நீக்கி அமைதியாகி இருக்கிறது பிரபல இணைய ஊடகம் என்ற தகவல் தற்போது போலி செய்தியை ஆதரமில்லாமல் பரப்பும் நபர்களுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.