Tamilnadu

இனி தான் இருக்கு தரமான சம்பவம் இலங்கை தமிழர்கள் எதிர்பார்த்த காலம் வந்துவிட்டது!

india and srilanka
india and srilanka

சீனாவிடம் வாங்கிய கடன்களால் பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள்  திவால் எனும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார அறிஞர் ஒருவர் ஏறத்தாழ பாகிஸ்தான் திவால் நிலையை அடைந்து விட்டது, அந்நிய செலாவணி சுத்தமாக தீர்ந்து விட்டது, மேலும் வெளிநாடுகள் பணம் கொடுக்க கூடாது என்ற கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் நாடு இருப்பதால் மேற்கொண்டு அதனால் பணத்தை பெற முடியவில்லை இந்த சூழலில் இலங்கையும் அதே நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. `தற்போது சீனாவுக்கு 24 பில்லியன் யுவான்களை வட்டியாக செலுத்த இலங்கைக்கு எந்த வழியும் இல்லை இதனால்  கடனை திருப்பி கொடு அல்லது அதற்கு இணையாக இலங்கையின் துறைமுகம் கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு கிடைக்கும் பகுதியை எழுதி கொடு என சீனா மிரட்ட தொடங்கி இருக்கிறது.


சீனா  ஒரு நாட்டிற்கு வழிய வந்து உதவி செய்கிறது என்றால் அதில் சூச்சைமம் இல்லாமம் செய்யாது யபோர் செய்யாது நாடுகளை ஆக்கிரமிக்கும் செயலை செய்யும் நாடு சீனா. எந்த நாட்டுக்கு சீனா உதவினாலும் பல வருட திட்டங்களை கணக்கு போட்டு தான் அது உதவி செய்யும் இப்போது சீனாவுக்கு பிரச்னை என்னவென்றால் `சீனாவை , சிங்கள மக்கள் ஆரம்பத்தில் பெரிது படுத்தவில்லை. இப்போது பாகிஸ்தானியர்கள் நிலையை பார்த்து சிங்கள மக்கள் சீனா குறித்து விழிப்படைந்துள்ளனர் மேலும் சீனர்களை கண்டாலே விரட்டி அடிக்கின்றனர்  எதிர்ப்பு காரணமாக , இப்போது சிங்கள பகுதிகளை விட்டு சீனா பின்வாங்கி விட்டது அதே நேரத்தில் இலங்கையில் தற்போது தமிழர்கள் வசிக்கும் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது.

இதே நிலை தமிழ் பகுதிகளுக்கும் வரலாம். உதவிய பின் , கடனை அடைக்க முடியாவிடில் அவர்கள் முக்கியமான சில பகுதிகளை தனதாக்கிக் கொள்ள முயலலாம். அப்படித்தான் அவர்கள் ஒப்பந்தங்களை செய்வார்கள். இது சற்று ஆபத்தானது.இந்த நிலையில் தமிழ் பகுதிகளை சீனா அபகரிக்க கன்னம் வைத்து விட்டது போல் உள்ளது எனத்தான் சொல்லத் தோன்றுகிறது. அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை வடக்கில் முக்கிய தாது பொருட்களும் , எண்ணையும் உட்பட பல கனிம வளங்கள் நிறைந்திருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  மன்னார் பகுதியில்  264.93 மெட்ரிக் டன் கனிமவளம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது  அவற்றில் குறிப்பாக இல்மனைட் மற்றும் டைட்டானியம் போன்ற விலை உயர்ந்த கனிம வளங்கள் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.  

இந்த வகை கனிம பொருள்கள் பெயிண்ட், பெவிக்கால் இது போன்ற ஓட்டும் பொருள்கள் அனைத்திற்கும் பயன்படுகிறது மேலும் முக்கியமாக ஆகாய விமானங்கள் தயாரிக்க டைட்டானியம் கனிமங்கள் மிகவும் பயன்படுகின்றன இந்தியாவிலும் இந்த வகை கனிமங்கள் உண்டு,, இதை தாது மணல் என்று சொல்லுகிறோம் .  இந்த வகை கனிமங்கள் கடல் அலையில் அடித்து வரப்பட்டு முதலில் இந்திய கரையோரம் ஒதுங்கும். அதாவது  குஜராத், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாட்டில் திருநெல்வேலி ராதாபுரம் பகுதிகளில் அந்த தாது மணல் 3 அல்லது 5 மாதங்கள் கடற்கரையோரம் குவியும். 

அதை நாம் அள்ள வில்லை என்றால் மறுபடியும் கடல் அந்த மணலை காற்று அடிக்கும் திசை நோக்கி நகர்ந்து இலங்கையில் மன்னர் பகுதியில் கொண்டு சேர்க்கும், அவர்களும் அதை சரி வர பயன்படுத்தவில்லை என்றால் அது அப்படியே ஆஸ்திரேலியா நோக்கி நகரும்..  அதனால் தான் அளவுக்கு அதிகமான தாது மணல் ஆஸ்திரேலியாவில் கிடைக்க காரணம்  நம் நாட்டில் அரசாங்கம் தாது மணல் தொழில் சாலை உள்ளது ,, ஆனால் அதை சரியாக இயங்குவதில்லை. தனியார் தொழில் சாலைகளுக்கு தடை விதித்த காரணத்தால் இந்தியாவில் தாது மணல் அள்ளுவதே இல்லை. அதனால் ஆஸ்திரிலேலியா இந்த தாது மணல் வியாபாரத்தில் உலகத்தில் No.1 ஆக இருக்கிறது இந்திரா காந்தி காலத்தில் இந்திய கடற்கரையோரம் உள்ள பகுதிகளை குத்தகைக்கு கேட்டது அமெரிக்கா என்றால் அதன் தேவையை அறிந்து கொள்ளலாம்.

இவை இப்படி இருக்க, இப்போது ஆஸ்திரேலியாவுக்கு சீனாவிற்கும் பகை அதிகமாகி கொண்டே போகிறது.. சீனாவுக்கு இப்போது ஆஸ்திரேலியாவை சரிக்க வேண்டும் என்று வெறி புடித்து அலைகிறது. அப்படி என்றால் அதன் வியாபாரத்தில் காய் வைக்க வேண்டும். அதற்க்கு தாது மணலை எடுத்து குறைந்த விலைக்கு விற்று ஆஸ்திரேலியாவை நஷடப்படுத்த வேண்டும் இவ்வளவுதான் இந்த பகுதிகளை மனதில் வைத்து தான் சீனா தொடர்ந்து இலங்கையை கடனாளி நாடாக்கி வைத்துள்ளது.அவர்கள் கொடுத்து வைத்திருக்கும்  கடனுக்காக சீனாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து அடைக்க முடியாது. பணமாக திருப்பி செலுத்த வேண்டும். அல்லது இலங்கையில் அவர்கள் கேட்பதை எழுதிக் கொடுக்க வேண்டும் இது தான் இப்போதைய நிலை.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் இப்போது இந்தியா ஒரு அறைகூவலை விடுத்து இருக்கிறது இலங்கை வெளிநாடுகளிடம், அதிலும் குறிப்பாக சீனாவிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் நாங்கள் அடைக்கிறோம். அதனை திருப்பி செலுத்த தேவை இல்லை. ஆனால் இனியாவது நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென ஒரு புது உடன்பாட்டை இந்தியா முன் வைத்துள்ளது.மேலும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு, அமெரிக்காவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.இந்த நிலையில், இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ள கருத்தும், இந்திய சார்பு நிலையை இலங்கை எடுத்துள்ளதை காட்டுகிறது.

ஏன் எனில் வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் இப்போது யாழிற்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்சக்தி திட்டத்தை சீனாவுக்கு கொடுக்காமல், இந்தியாவிடம் கையளிக்க இலங்கை திர்மானித்துள்ளது. மேலும், இதனை முன்னரே அறிந்து கொண்ட சீனா, தாம் அந்த திட்டத்தை கை விட்டு பல நாட்கள் ஆகிறது என்று தற்போது கூறியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் இருந்து சீனாவை முற்றாக அகற்ற இந்தியா மற்றும் அமெரிக்கா புது திட்டம் ஒன்றை வகுத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது அது வரும் நாள்களில் வெளியே தெரியும் என்றும் சொல்லப்படுகிறது .

இனி இலங்கையின் விதியை இந்தியா தான்  தீர்மானிக்க வேண்டி வரும் என, சொல்லும் காலம் தொலைவில் இல்லை  எப்படியாவது இலங்கை சிங்கள பேரினவாதத்தில் இருந்து தமிழர்கள் வெளியேறி சுதந்திரகாற்றை சுவாசிக்கும் சூழல் வராதா என காத்து கொண்டு இருக்கும் இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களுக்கு பிரதமர் மோடியின் ஆட்சியில் விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.