24 special

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு..! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

கடந்த இரண்டு வாரங்களாக தமிழக அரசியலில் பேசு பொருளாகவும் திமுகவிற்கு பெரும் தலைவலியாகவும் இருந்து வருவது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை நடத்துகின்ற சோதனை. இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களை தவிர அவர் நெருக்கமான இடங்களிலேயே வருமானவரித்துறையினர் அதிகமாக சோதனைகளை மேற்கொண்டனர்.


அவரது சகோதரர் அசோக் தொடங்கி வழக்கறிஞர் செங்கோட்டையன், அலுவல் பணியாளர் மைதிலி மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் என பலரிடம் தீவிர விசாரணை மற்றும் ரெய்டை நடத்தி வந்தனர். இந்த சோதனையின் பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் மத்திய அரசையும் உலுக்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனைகளை மேற்கொள்ள சென்ற அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் அளித்ததன் பெயரில் மத்திய அரசு மத்திய ராணுவ படை வீரர்களை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக நியமித்தது. 

அதன்படி துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் தற்போது தங்களது பணிகளை மேற்கொண்டு 8 நாட்களாக சோதனை நடத்தினர் வருமானவரித்துறையினர். சாதாரணமாக நடைபெற இருந்த வருமான வரித்துறை சோதனையை தீவிரமடைய காரணமாக இருந்தது அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவமே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜி மீது கோபமாக உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது பணிகளை அதிதீவிரமாக மேற்கொண்டு பல ஆவணங்களையும் ரசீதுகளையும் பணப் பரிமாற்ற வங்கி ரசீதுகள் அரசு ஒப்பந்தங்கள் என அனைத்தையும் பெட்டி பெட்டியாக தூக்கி செல்கின்றனர் தங்களிடம் கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் வைத்து அடுத்தடுத்த சோதனைகளை மேற்கொள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். 

வருமானவரித் துறையினர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களை விடுத்து அவரது நெருக்கமான இடங்களை சுற்றி அதிரடி சோதனை மேற்கொள்வதற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்கூட்டியே இந்த ரெய்டை பற்றி தெரிந்து, அனைத்து ஆவணங்களையும் பதுக்கியது வருமானவரித் துறையினருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலயே இந்த ரெய்டு அதிக இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,  செந்தில் பாலாஜிக்கு இந்த ரெய்டு பற்றிய எச்சரிக்கையை முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது பரவி அரசியல் வட்டாரங்களை வியப்படையச் செய்து வருகிறது. அதாவது கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் லோக்சபா தேர்தல் பற்றிய பேசிய பிறகு தேர்தல் விரைவில் வர உள்ளதால் அனைத்து அமைச்சர்களும் கவனமாக இருங்கள் எந்த ரெய்டும்  திடீரென யார் மீது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் எனவே அனைவரும் அனைத்திற்கும் தயாராக இருங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

முதல்வர் ஸ்டாலினின் இந்த எச்சரிக்கையால் அமைச்சர் செந்தில் பாலாஜி அலர்ட் ஆகி தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டை தொடர்ந்து மற்ற முக்கிய அமைச்சர்கள் மீதும் வருமான வரித்துறை அல்லது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது இதனால் மற்ற அமைச்சர்களும் எப்போதும் அலார்ட்டாக இருக்கின்றனர் எனவும் எப்போது யார் வீட்டில் ரெய்டு நடத்தப்படும் என்ற பயத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் விழி பிதுங்கி உள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.