டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கில் நடிகை ஓவியா எதிர்ப்பு குரலை எழுப்பியிருக்கிறார்.
நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அவரது இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வந்தன இந்தியாவில் அளவிற்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி இருப்பு இருக்கிறது, ஆனால் மக்கள் போட்டு கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் பல தடுப்பூசிக்கள் வீணடிக்க பட்டுள்ளன, இப்படி இருக்கையில் தடு பூசி பற்றாக்குறை இருப்பதாக சித்தரித்து பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் இப்போது தடுப்பூசி எங்கே என கேள்வி எழுப்பும் பலரும், தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என பிரதமர் அறிவுறுத்திய போது,பிரதமர் ஏன் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை எனவும், நடிகர் விவேக் இறந்ததை வைத்து தடுப்பூசிக்கு எதிராக வதந்தி பரப்பியவர்கள்தான், இந்நிலையில் பிரதமருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் நடிகை ஓவியா அவ்வப்போது ட்விட் செய்து வருகிறார்.
இதன் பின்னணியில் சினிமா வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் /நடிகைகளை மத்திய அரசிற்கு எதிராக ட்விட் செய்ய சொல்லி ஒரு பிரபல நிறுவனம் இயக்கி வருவதாகவும் அதற்கு ஈடாக சினிமா வாய்ப்புகள் அல்லது பணம் ஆகியவை கொடுக்க படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் எரிக்க இடமில்லாமல் சுடுகாடுகள் நிரம்பி வழியும் நிலையில் மக்களை காப்பாற்றத தமிழக அரசை விமர்சனம் செய்வதற்கு பதில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதிலே சினிமா பிரபலங்கள் காலத்தை கழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.