கடந்த சில நாட்களாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழக தி.மு.க அரசு செமத்தியாக ரெய்டு விட்டு வருகிறது. ஆனால், எந்த ஒரு ஊடகமும் இது குறித்து செய்தியோ, விவாதங்களோ நடத்துவதே இல்லை என பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா விமர்சனம் செய்துள்ளார், இதுகுறித்து அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :-
பல ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்கில் மருத்துவமனை வாசலில் காத்திருப்பதால், மற்ற நோயாளிகளின் தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை, மருத்துவமனை வளாகத்தில் உடனடியாக நோயாளிகளை மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.
ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் மிகுந்த குளறுபடி, அரசாங்கமே அந்த பொறுப்பை ஏற்று தேவைபடும் அரசு/தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். கூட்டத்தை இப்படி கூட்டி, மக்களை அலைய விடுவது என்ன மாதிரியான செயல்?
கொரோனாவால் ஏற்படும் இறப்பு நடந்தால் பிணங்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு உரிய மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கொரோனா இறப்புகள் தமிழக அரசால் குறைத்து காட்டப்படுகிறது, கொரோனாவால் ஏற்படும் இறப்புகள், கொரோனா அல்லாத இறப்புகளாக கணக்கெடுக்கப்படுகிறது. இதை விடுத்து உண்மை எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.
இவையனைத்தும் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக சொன்னது. மேற்படி விஷயங்களில் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் அதற்கு காரணம் தமிழக அரசு அல்ல, மாறாக நீதிமன்றத்தில் வாங்கிய குட்டுக்கு பிறகு வேறு வழியின்றி தமிழக அரசு செய்கிறது என பொருள் கொள்ள வேண்டும்.
இப்படி அனைத்து மக்கள் தேவைகளும் உயர் நீதிமன்றம் சொல்லி தான் இந்த அரசு செய்யும் என்றால், தமிழகத்தில் ஒரு அரசாங்கமும், முதல்வரும் இருக்கின்றனரா? இயங்குகின்றதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.தாமதிக்கப்பட்ட முடிவுகள், ஆளுமை இல்லாத தமிழக தி.மு.க அரசாங்கம், செயல்திறனற்ற முதல்வர். வெட்கக்கேடு. நாம் பெற்ற சாபம். என கடுமையாக சாடியுள்ளார் SG சூர்யா.
தமிழக ஊடகங்கள் பல ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளை மூடி மறைத்தாலும் எப்படியோ செய்திகள் மக்கள் மத்தியில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.