இந்திய நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவட் உட்பட 11 பேர் தமிழகத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முப்படை தளபதி மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது அவரது துணைவியார் உட்பட இறந்த மற்ற இராணுவ வீரர்களுக்கும் இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் என பலத்தரப்பும் அஞ்சலி செலுத்தினர், இந்த சூழலில் இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏன் முப்படை தளபதி மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது, பலரும் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ஜனாதிபதி மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தாதது குறித்து அவரது செயலர் விளக்கம் அளித்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில், மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ௧௧ வீரர்கள் உடல்கள் டில்லிக்கு விமானத்தில் ௯ம் தேதி இரவு எடுத்து வரப்பட்டன.பாலம் விமான நிலையத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதிக்கு பதில் பிரதமரோ அல்லது ராணுவ அமைச்சரோ தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது தான் நடைமுறை. அது தான் தற்போது பின்பற்றப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்ததும் தன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த ஜனாதிபதி, விபத்து பற்றிய விபரங்களை அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்தார்.இவ்வாறு அவர் கூறினார். ஜனாதிபதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த கூடாது என்ற மரபின் காரணமாகவே அவர் அஞ்சலி செலுத்தவில்லை என்ற காரணத்தை தெரிவித்துள்ளது ஜனாதிபதி மாளிகை.