Tamilnadu

ஆளுநரை சந்தித்து அண்ணாமலை தெரிவிக்கும் மூன்று முக்கிய விவகாரம்.. கைது லிஸ்டில் யார் யார்?

Annamalai meets Governor
Annamalai meets Governor

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழகத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் திமுகவினர் மற்றும் ஆளும் அரசின் கூட்டணி கட்சியினர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிந்தாலும் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்வது இல்லை என்ற எதிர்ப்பு குரல் அதிகரித்துள்ளது.


இந்த சூழலில் மாரிதாஸ் கைது செய்யபட்ட சூழலில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் பாஜக தலைமைக்கு கிடைத்துள்ளது, இந்த சூழலில்தான் ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை, இதற்காகவே நேற்று பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால் கனகராஜ் உள்ளிட்ட குழுவினரை தனியாக சந்தித்து 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் அண்ணாமலை,

முப்படை தலைமை தளபதி ‘பிபின் ராவத் மரண விவகாரத்தில் சமூக தளங்களில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தேச விரோத கருத்தையும் ஆவணப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.மேலும், ‘தமிழகத்தில் அமைச்சர்களுக்கு எதிரான முக்கியமான டாக்குமென்ட்டுகள் வேண்டும். இதை வைத்து இந்த ஆட்சியை நாம் எளிதில் விட கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார் அண்ணாமலை.

தமிழகத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் தொடர்பாக பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷிடமும் அண்ணாமலை பேசியதாகவும், ‘இதுகுறித்து பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரிடமும் தெரிவிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் அண்ணாமலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும் விவகாரத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள் அவர்கள் தெரிவித்த அவதூறு கருத்துக்கள் என பல பட்டியல் அளிக்கப்படுகிறது.

இவை தாண்டி பெண்களை அவதூறாக விமர்சனம் செய்த திமுகவினர் பட்டியல் இவை தவிர்த்து பத்திரிகையாளர் இருவர்.. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த என் உடல் என் உரிமை என சமூக வலைத்தளத்தில் வலம் வரும் பெண் ஒருவர்.. திராவிட கழகத்தை சேர்ந்த அமைப்பினர் உட்பட பல்வேறு நபர்கள் பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளன.

அண்ணாமலை பட்டியல் அளித்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை ஆளுநர் நேரடியாக அழைத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விசாரணை நடத்தப்படலாம் எனவும் மாரிதாஸ் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தால்.. பட்டியலில் உள்ள நபர்களையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனவும் அவ்வாறு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உள்துறைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கவும் ஆளுநர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் மாரிதாஸ் கைது செய்யப்பட வேண்டும் என பல அமைச்சர்கள் விடா பிடியாக இருப்பது ஏன் என்றும் அதற்கான காரணம் என்ன எனவும் அண்ணாமலை ஆளுநரிடம் விளக்கமாக கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, தற்போது தமிழக காவல்துறை கடும் எதிர்ப்பை சந்தித்த சூழலில் அடுத்தடுத்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக பேசிய நபர்கள் நாமும் கைது செய்யப்படலாமோ என்ற கடும் பதற்றத்தில் இருக்கின்றனராம்.

திமுக அரசு தொடங்கிய சதுரங்க ஆடு புலி ஆட்டத்தில் இந்த முறை திமுக மாரிதாஸை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவில்லை என்றால் சொந்த கட்சியினர் ஆதரவாளர்கள் இடையே மதிப்பை இழக்க நேரிடும் அதே நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்தால் மிக பெரும் அரசியல் ரீதியிலான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறதாம் திமுக அரசு.

(அடுத்த பதிவில் அண்ணாமலை குற்றசாட்டு குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ரியாக்க்ஷன் என்ன? மதுரை காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியது என்ன என்பது குறித்து பதிவு செய்கிறோம்.)

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.