Tamilnadu

கதறும் "சூர்யா" பேசி பேசியே நடு முச்சந்திக்கு.. கொண்டு வந்த சவுக்கு வாயை மூடு என வந்து அழைப்பு..!

Suriya and PMK
Suriya and PMK

நடிகர் சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் திரையரங்குகளில் நாளை (மார்ச் 10ம் தேதி) வெளியாக உள்ளது. இந்நிலையில் பாமகவினர் பல்வேறு மாவட்டங்களில் சூர்யா திரைப்படத்தை வெளியிட கூடாது என மனு கொடுத்து வருகின்றனர்.


சமீபத்தில் கரூர் திரையரங்க மேலாளர்சங்க தலைவர் பழனிச்சாமியிடம், கரூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நா.பிரேம்நாத் தலைமையில் பாமகவினர் இன்று (மார்ச் 9ம் தேதி) மனு அளித்தனர்.

இதுகுறித்து பாஜக தரப்பில் தெரிவித்ததாவது ''நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் 2ம் தேதி ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இதில் மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் உண்மை பெயரில் நடிக்க, பட்டியலின கிறிஸ்தவரான உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்திரத்திற்கு மட்டும் குருமூர்த்தி என பெயர் வைத்து அதனை குரு, குரு என முன்னாள் வன்னியர் சங்க தலைவர் பெயரில் அழைத்து, வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்டி அவரை வன்னியராக சித்தரித்துள்ளனர்.

மேலும், வன்னியர்களை ஜாதி வெறியர்கள் போல சித்தரித்து வடமாவட்டங்களில் அமைதியாக வாழும் இருளர், வன்னியர் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்ப்பு எழுந்தபோது நடிகர் சூர்யா மறுப்பு தெரிவிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டார். நடிகர் சூர்யா பொதுமன்னிப்பு கேட்காமல் நடிகர் சூர்யாவின் நாளை வெளியாகும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது.

பொதுமன்னிப்பு கேட்கும்வரை சூர்யா நடித்த எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அதனை வெளியிடவிடாமல் பாமக தடுக்கும்'' என்றார். ராக்கி முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர், இப்படி பாமகவினர் எதிர்ப்பு தெரிவிக்க சூர்யா தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறது இந்த சூழலில் எரிகின்ற கொல்லியில் எண்ணெய் ஊற்றுவது போல பேசி பாமகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளார் சவுக்கு சங்கர்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேசிய. சவுக்கு சங்கர்  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் ஓடக் கூடாது என பாமக மாணவரணி செயலாளர் திரைப்பட உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.

இது அராஜகம், ஒரு 5 செகண்டுக்கு  காலண்டர் வைத்து விட்டார்கள் என்பதற்காக சூர்யா உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? இப்படி தொடர்ந்து நடந்தால் இது எங்கே போய் முடியும்? வன்னியர் சமூகத்தின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கிற ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

சூர்யாவின் படத்தை திரையிடக்கூடாது என பாமகவின் மாணவரணி செயலாளர் எழுதிய கடிதம் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு தெரியாதா? அப்படி என்றால் நாட்டில் யாரும் படம் எடுக்க கூடாதா என ஆவேசமாக பேசினார் இது பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள சூழலில் சூர்யா தரப்போ ஏன் இந்த வேலை என வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க மாட்டாரா இந்த ஆளு.. நமக்கு இருக்கிற பிரச்சனையில் இது வேறயா என சூர்யாவிற்கு அறிவுரை வழங்கும் ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு கதறியுள்ளாராம். அவரும் சவுக்கு சங்கரை வாயை மூடுங்கள் என தொலைபேசியில் நாகரீகமாக கூறியதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகுமா? சூர்யா மன்னிப்பு கேட்பாரா? என்ற கேள்வியே இப்போது சினிமா துறையில் கேள்வியாக எழுந்துள்ளது.