Tamilnadu

#சற்றுமுன் (09/03/22) வெளியான கருத்து கணிப்பு உத்திர பிரதேசத்தில் யாருடைய ஆட்சி..!

U.P election
U.P election

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை காலை (10/03/22) அன்று வெளியாகிறது இந்த சூழலில் உபியில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்ற கடந்த 7 -ம் தேதி மாலையே பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகின இதில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் தெரிவித்தன.


இந்த சூழலில் கடைசிகட்ட தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் ஆய்வு செய்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது புதிய நிறுவனம் அது பின்வருமாறு :-உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நிறைவு பெற்றது. நாளை 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, டைம்ஸ் நவ்-வீட்டோ, ரிபப்ளிக் பி-மார்க், ஏபிபி-சிவோட்டர் மற்றும் நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா ஆகியவற்றின் முடிவுகள் உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜகவெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பஞ்சாபில் காங்கிரஸிடம் இருந்த ஆம் ஆத்மிக்கு வெற்றி கைமாறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நிறுவனம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

இதில் கூறப்பட்டுள்ளதாவது:இதன்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரிய வெற்றியைப் பெறும். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெறும். 

கோவா மற்றும் உத்தரகாண்டில் பாஜகவெற்றி பெறும். இருப்பினும் கோவாவில் கடுமையான போட்டி இருக்கும். மணிப்பூரில் பாஜகவுக்கு வெற்றி பெற்றன.லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜகவுக்கு 43 சதவீத வாக்குகளைப் பெறும்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 35 சதவீதத்தைப் பிடிக்கும்.காங்கிரஸும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முறையே 3 சதவீதம் மற்றும் 15 சதவீதம் பெறும். மீதமுள்ள வாக்குகள் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு செல்லும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய கருத்து கணிப்பிலும் பாஜக வெற்றி பெரும் என குறிப்பிட்டு இருப்பதால் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்யும் கட்சிகள் கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.