24 special

பாஜகவினர் செய்த சம்பவத்தால்...!அதிர்ந்து போன திமுகவினர்

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

 பாஜகவினர் நிகழ்த்திய சம்பவம் தான் மாவட்டம் முழுவதும் கட்சிகளை கடந்து பேசு பொருளாக மாறி இருக்கிறது, அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் மாவட்டம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.


அப்போது அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பல்வேறு பேனர்களை வைக்க ஆயத்தமாகினர், ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் பேனர் வைக்க அனுமதி கிடையாது, உடனடியாக பேனர்களை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

அமைச்சர் MRK பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு அடிப்படையில் பாஜக பேனர் வைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்து இருப்பதாக பாஜகவினர் குற்றம் சுமத்தி கொண்டே இருக்கும் வேலையில் அருகில் மற்றொரு சம்பவம் அரங்கேரியது, பாஜகவினர் நாங்கள் கட் அவுட் வைக்க கூடாது என்றால் இந்த திமுக அமைச்சர் கட் அவுட் ஏன் இங்கு இருக்கிறது முதலில் அதை வெளியேற்றுங்கள் என பாஜகவினர் குரல் கொடுக்க எதிர்ப்பு குரல் அமைதியாகியது.

உடனடியாக பாஜகவினரே திமுகவினர் வைத்து இருந்த கட்டவுட்டை அகற்றினர், தூக்கி கொண்டு சென்று மூலையில் வைத்தனர். இங்கு தான் அமைச்சர் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருக்கிறது, முன்பெல்லாம் அதிமுகவினர் தான் திமுகவினருக்கு மாவட்ட ரீதியாக பதிலடி கொடுப்பார்கள் ஆனால் இந்த முறை பாஜகவினர் நேரடியாக திமுகவினருக்கு மாவட்ட ரீதியாக பதிலடி கொடுத்து இருப்பது சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இந்த சூழலில் என்ன நடந்தது என பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை போட்டு இருக்கிறாராம். மத்திய அரசின் நலத்திட்டங்கள், பிரதமர் மோடியின் நல்லாச்சி, கட்சி கொடி அமைப்பது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது வேறு வழியில் இடையூரு செய்தாலோ அதே வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அதன் அடிப்படையில் திமுகவினர் என்ன வழியை கையில் எடுத்தார்களோ அதே வழியை பாஜகவினரும், கடலூரில் பேனர் விஷயத்தில் கையில் எடுத்த சம்பவம் மாவட்டங்களை கடந்தும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.