கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வெற்றி பெற்று திமுக ஆளுங்கட்சியாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் திமுகவின் முக்கிய அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதும், அந்த சோதனையின் இறுதியில் இதுவரை கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும் ஊழல் செய்வதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதுடன் கணக்கில் வராத சொத்துக்களையும் முடக்கினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ரெய்டு மற்றும் கைது நடவடிக்கை, அமைச்சர் பொன்முடி மீதான ரெய்டு நடவடிக்கை, அடுத்தபடியாக வரவிருக்கும் ரெய்டு பற்றிய தகவல்கள் திமுக அரசு மீது மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியதும் அறிவாலய தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போதாது என்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை அளித்து அதில் பாதியை கூட நிறைவேற்றாமல் அதற்கும் மக்களின் மத்தியில் பல விமர்சனங்களை திமுக சந்தித்து வருகிறது என்று செய்திகள் வெளிவருகின்றன இருப்பினும், இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டாலும் அதில் பல வழிமுறைகளை திமுக வரையறுத்து உள்ளதால் அதுவும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சட்டரீதியாகவும் மக்கள் மத்தியிலும் திமுகவின் ஆதரவுகள் குறைந்து கொண்டே வருகின்ற காரணத்தினால் இனி அடுத்த ரெய்டு லிஸ்டில் யார் இருப்பார் அவரை எப்படி காப்பாற்றுவது என்ற ஆலோசனையிலும் தேசிய அளவில் கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கும் முதல்வர் சென்று வருகிறார்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுக இருந்து வருகிறது இந்த நிலையிலும் தேர்தலுக்கு அதிக நாட்கள் இல்லை விரைவில் வர உள்ளது என்று திமுகவின் பொருளாளரே கூறியுள்ளது அறிவாலயத்திற்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த போகிறார் என்பதாலும் தற்போது திமுக இருக்கும் நிலைமையை மாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அரசு கொண்டுவரும் எந்த ஒரு சிறப்பு திட்டமும் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் என்ற முறையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒவ்வொரு நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின்பொழுது சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் சந்தை படுத்தப்படுகிறதா அதன் நடவடிக்கைகள் சரியாக உள்ளதா? மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட அனைத்து சிறப்பு திட்டங்களும் மக்களிடம் சேர்கிறதா அதில் ஏதும் தாமதம் ஏற்படுகிறதா என்பதை குறித்து ஆய்வு செய்து இனிமேல் எந்த ஒரு திட்டத்திலும் தாமதம் ஏற்படுத்த ஏற்படக்கூடாது குறைகள் யாரும் கூறக்கூடாது அந்த வகையில் திறமையாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று உதயநிதி அந்த ஆய்வின் போது அறிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் பின்னணியில் 2024 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தான் இப்படி அரசு இயந்திரத்தை திமுக தலைமை முடுக்கி விட்டுள்ளது என தெரிகிறது. இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க மக்கள் மத்தியில் அரசு திட்டங்களை சரிவர சேர்ப்பதுதான் ஒரே வழி என முதல்வர் தரப்பு உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.