24 special

அவ்வளவு எச்சரித்தும் ஆபத்தை தொட்ட திமுக..! இனி காப்பாத்த வழியே இல்லை...!

Mkstalin,
Mkstalin,

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரின் மத்தியிலும் தற்பொழுது பரபரப்பாக பேசப்படும் செய்தி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் தான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்பத் தலைவியருக்கும் ஆன ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை திட்டத்தை பற்றி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. 


இந்நிலையில் மக்கள் மத்தியில் எங்கே ஆயிரம் ரூபாய் உரிமை தொகை  என்ற  கேள்விகள் எழுந்த உடனே முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் ஈரோடு மாவட்டம் கிழக்கு தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் திட்டம் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.மேலும்  2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில்  குடும்பத் தலைவிக்கான உரிமை தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் விட்டால் அது திமுகவிற்கு பேரிழப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என்பதால் வருகின்ற செப்டம்பர் மாதம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு அனைத்து மகளிருக்கும் ரேஷன் கடைகளில் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 

மேலும் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் என அறிவித்துவிட்டு தற்போது தகுதி உடையவர்கள் தகுதி இல்லாதவர்கள் என பிரித்து வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்த உரிமை தொகை குறித்து அரசியல் விமர்சனங்கள் பல எழுந்துள்ள நிலையில் முதலமைச்சரின் உரிமை தொகை திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிற கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளிவந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை  முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. 

மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு ரேஷன் கார்டு மற்றும் வங்கிக்  ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை தகுதியின்  அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறியவுடன் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது விண்ணப்பம் விநியோகம் ஆரம்பித்து விண்ணப்பம் பெறுவதில் கூட மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம் விவரம் தெரியாதவர்கள் கூட இந்த உரிமை தொகை வழங்கும் திட்டத்தில்  விண்ணப்பிக்க தகுதி உடையவர்களா அல்லது தகுதி இல்லாதவர்கள் என தெரியாமல் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி அனைத்து மகளிரும் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வரும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே 1000 ரூபாய் கிடைக்கும் என்பது திமுகவிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் . ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்தும் அதனை புறக்கணித்துவிட்டு விண்ணப்பத்தை கொடுக்க திமுகவினர் தொடங்கி விட்டனர். திமுக மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இந்த திட்டத்தை பரிசீலனை செய்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என அரசியல் வட்டாரங்களில் கூறிய போதும் அதனை கண்டுகொள்ளாமல் விண்ணப்ப படிவத்தை விநியோகம் செய்ததால் திமுக பெரும் ஆபத்தை சந்திக்க போகிறது என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய்  வழங்கும் விவகாரத்தில் வசமாக திமுக சிக்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.