தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி கரூர் எம்பி ஜோதிமணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சென்றதும் ஜோதிமணிக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கியது போன்ற சம்பவங்கள் ஜோதிமணி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி, ஜோதிமணி ஏற்பாட்டின் பேரில் யூடுப் சேனல் ஒன்றில் காளான் பிரியாணி செய்து சாப்பிட்டார், இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் வரவேற்பை பெற்றது இருப்பினும் இந்திய அளவில் ராகுல் காந்திக்கு கடும் பின்னடைவை பின்னாட்களில் கொடுத்துள்ளதாம் இதனால் பல இடங்களில் சங்கடத்தை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
இது ஒருபுறம் என்றால் காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்தார் ராகுல் இந்த நிகழ்ச்சியில் ஜோதிமணிக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்ததாம் ஆனால் பின்வரிசையில் தான் ஜோதிமணிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது இது தவிர்த்து ராகுலை ஜோதிமணி சந்திக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.
தனக்கு ராகுலின் ஆதரவு இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி கட்சியின் மூத்த நிர்வாகிகளை மதிப்பது இல்லை, கூட்டணி கட்சியான திமுக மந்திரி ஒருவருடன் மோதல் போக்கை உண்டாக்கி கூட்டணியை சிதைக்க பார்த்தது என பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளதாம் இதனாலும் ஜோதிமணிக்கு முன்பு போல் ராகுல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் என்றால் அமைச்சர் சேகர் பாபுவை விமர்சனம் செய்து இருந்தார் வீரமணி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி கொண்டாட கூடாது எனவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார் ஆனால் அவர் பேச்சை சேகர்பாபு துளியும் மதிக்கவில்லை மாறாக மிகவும் சிறப்பாக சிவராத்திரி விழாவை அரசு சார்பில் கொண்டாடி இருக்கிறார், அத்துடன் முதல்வர் ஸ்டாலின் குடும்பமே சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வீரமணி முகத்தில் கரியை பூசியுள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மொத்தத்தில் ஜோதிமணி வீரமணி என இருவருக்கும் நேற்றைய தினம் கடும் பின்னடைவை கொடுத்துள்ளது. ஜோதிமணிக்கு கல்லுப்பை பார்ஸல் செய்துள்ளார் ராகுல் வீரமணி திருநீரை பார்ஸல் செய்துள்ளார் சேகர் பாபு என கிண்டல் செய்கின்றனர் நெட்டிசன்ஸ்.
More Watch videos