Tamilnadu

மிஸ்டர் "சீப்பு".. இப்போ தெரியுதா இந்தியா ஏன் சீனா ஆப்களை தடை செய்தது என?

Stallin raja
Stallin raja

சீனா நாட்டை சேர்ந்த ராணுவத்தினர் நமது நாட்டு எல்லையில் ஊடுருவ முயன்ற போது நமது ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்,இதில் ஏராளமான சீனா ராணுவத்தினர் பாலியகினர் துருதிஷ்ட வசமாக நமது ராணுவ வீரர்களும் பாலியகினர் இந்த சூழலில் நாடு முழுவதும் சீனா மீது கடும் கொந்தளிப்பு எழுந்தது.


இந்த சூழலில் சீனாவை சேர்ந்த செல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது எதிர்கால நடவடிக்கைகளை கணக்கிட்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது, இதனை கிண்டல் செய்யும் விதமாக பதிவு செய்தவர் செந்தில் இதன் பிறகு அவர் பணியாற்றிய ஊடகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பலரும் வெளியேறினர் இந்த சூழலில் செந்தில் பிற நாட்களில் சீப்பு செந்தில் என அழைக்கப்பட்டார் அப்போது ஆப் தடை செய்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியவர் செந்தில் இப்போது ரஷ்யா உக்ரயின் மோதல் மூலம் என்ன நடக்கிறது என புரியவைத்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ரஷ்யாமேல் பெரும் தடை விழுந்ததை அடுத்து கூகுள் முதல் பல நிறுவனங்கள் ரஷ்யாவிற்கான சேவையினை நிறுத்திவிட்டன‌, இது பல வகையான சேவைகளை பெற்றுவந்த ரஷ்யர்களைபெரும் குழப்பத்தில் தள்ளிவிட்டது, பணம் அனுப்புவது முதல் எல்லா விஷயங்களையும் வெளிநாட்டு ஆப்ஸ்கள் மற்றும் இதர சேவைகளில் பெற்றுவந்த ரஷ்யா பெரும் குழப்பத்தில் கிடக்கின்றது.

ஆம் இது விஞ்ஞான காலம், எல்லைகளை கடந்து ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் கண்காணா வழிகளில் நுழைந்து சேவை என சொல்லி பணம் கறந்து ஒரு கட்டத்தில் தீரா சிக்கலில் தள்ளிவிட முடியும், இதனால்தான் இந்தியாவின் மோடி அரசு விழித்து கொண்டு பல அத்திவாசிய ஆப்ஸ்கள் மற்றும் நிரல்களில் இந்திய தயாரிப்பினை ஊக்குவித்து பயன்படுத்துகின்றது. (Bhim, UPI)

சீனாவுடன் முன்பு 50 ஆப்க்ஸ்களை இந்தியா ஏன் நிறுத்தியது என்றால், இப்பொழுதும் கூடுதலாக பல சீன தரவு சேவை தளங்களை முடக்கியது என்றாலும் இதனால்தான், இதெல்லாம் நாட்டை நேசிப்பவர்களுக்கு புரியும், நாட்டுக்குள் திராவிட சீப்பை தேடும் கும்பலுக்கு புரியாதுஎன குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.

இப்போதாவது சீப்புவிற்கு புரியுமா என கேள்வி எழுப்புகின்றனர் பாஜகவினர்.

More watch videos