நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி யாரை பாதித்ததோ இல்லையோ நிச்சயம் தமிழகத்தில் உள்ள பல பத்திரிகை துறையை சார்ந்தவர்களை கதற செய்துள்ளது என்றே கூறலாம் ஒரு பக்கம் செந்தில் என்ற சீப்பு செந்தில் என்ற அடைமொழியுடன் பாஜகவினரால் அழைக்கப்படும் செந்திவேல் புலம்பி வருகிறார்.
உரையாடல் என்ற பெயரில் ஜென்ராம் மற்றும் ஐயன் கார்த்திகேயன் இருவரும் மறுபக்கம் எப்படி அழாமல் விவாதம் செய்வது என்ற தொனியில் உரையாடல் நிகழ்த்தி தேர்தல் முடிவுகளை பார்த்து வருகின்றனர், தேர்தலுக்கு முன்னர் பாஜக தோல்வியை தழுவும் பல ஆருடம் சொன்ன தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் அமைதியாகிவிட்டனர்.
நிலைமை இப்படி இருக்க தனியார் ஊடகம் ஒன்றில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து விவாதம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட மூத்த எழுத்தாளர் பிரபாகரன் தனது கருத்தை தெரிவித்து வந்தார் ஒரு கட்டத்தில் நான் சொல்லும் கருத்திற்கு எதிர் கருத்து சொல்லும் அண்ணன் பிரியன் கூட சொல்லலாம் என உதாரணமாக தெரிவித்தார்.
அவ்வளவுதான் தாமதம் என்னை பார்த்து எப்படி அவ்வாறு கூறலாம், என் அனுபவம் தெரியுமா? நீங்கள் யார் who are you? எனவும் கொந்தளித்து விட்டார் நெறியாளர் மற்ற பங்கேற்பாளர்கள் என யார் சமாதான படுத்தியும் பிரியன் அமைதியாகவில்லை அதாவது பிரபாகரன் கேட்ட கேள்வியும் 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியும் பிரியனை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் மற்ற பத்திரிகையாளர்களை போன்று முன்கள பணியாளராக மாறிவிட்டார் என பலரும் விமர்சனத்தை வைக்கின்றனர். பாஜகவின் வெற்றி யாரை யாரை எல்லாம் பாதித்துள்ளது எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.