24 special

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று...!தமிழகம் திரும்பிய கையோடு முதல்வரின் முதல் வேலை

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக முதலீட்டாளர்களை சந்திக்க சென்றுவிட்டு நேற்றைய தினம் சென்னை திரும்பினார், மூத்த அமைச்சர்கள் மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்து இருந்ததுடன் ஐடி ரெய்டு, செங்கோல் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பதில் கொடுத்து பேட்டியை முடித்துக்கொண்டு சென்றார்.

இது ஒருபுறம் என்றால் சென்னை திரும்பிய முதல்வருக்கு முகத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சிகள் இல்லை, சென்னை திரும்பிய கையோடு சமீபத்தில் முதல்வர்களின் செயலாளராக இருந்து மாற்றம் செய்யப்பட்ட முக்கிய அரசு அதிகாரி  மற்றும் மாநில உள்துறை அதிகாரி இதுவரையும் தொடர்புகொண்டு பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

அப்போது இருவரும்  முதல்வர் வெளிநாடு சென்ற நேரத்தில் மாநிலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார்கள், முதலில் கரூர் முழுவதும் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அப்போது உளவுத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி முதல்வரிடம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை பல் வேறு பின்விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது, மேயர், துணை மேயர் திமுக கவுன்சிலர்கள் என   பலர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டின் முன்பு நின்று வருமான வரித்துறை அதிகாரிகளை சிறை பிடித்தது பெரும் சட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டி இருக்கிறது.

ஐடி ரெய்டு என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் அங்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மேயர், துணை மேயர் என சென்றது மிக பெரிய தவறான முன்னுதாரானம், இதையே காரணமாக கொண்டு மத்திய புலனாய்வு அமைப்புகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் கேட்பார்கள்.

ஆளுநர் மாளிகையில் இருந்தும் விளக்கம் கேட்கப்படும் இவற்றிற்கு என்ன பதில் கொடுப்பது என முதல்வரிடம் கொட்டி தீர்த்து இருக்கிறார்களாம், இது தவற பல்வேறு அமைச்சர்கள் மாவட்டத்தில் முறையாக வேலை செய்வது இல்லை, எதிர் கட்சிகளுக்கு சிலர் தகவல்கள் கொடுக்கிறார்கள் என பட்டியல் போட்டு கொடுத்து இருக்கிறார்களாம்.

முதல்வர் ஸ்டாலின் இவற்றின் அடிப்படையில் விரைவில் அமைச்சரவையை மாற்ற முடிவு செய்து இருக்கிறாராம் விரைவில் செந்தில் பாலாஜி வசம் உள்ள டாஸ்மாக் சம்மந்தப்பட்ட துறை மாற்றம் செய்யப்பட்டு வேறு மூத்த அமைச்சருக்கு கொடுக்க இருக்கிறாராம். முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றி கொடுக்கும் என கணக்கு போட்ட நிலையில் மாறாக மாநிலத்தில் நிலவும் குழப்பங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறதாம்.