தற்போது உள்ள இந்தியாவிற்கும் ஒரு 15 வருடங்களுக்கு முன்பு இருக்கும் இந்தியாவிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று பார்த்தால் அதிகபட்ச வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பொருளாதார தேவைகளிலும் அறிவியலிலும் அதிகம் முன்னேற்றத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதற்காக பல சாதனைகளையும் விருதுகளையும் பாராட்டுகளையும் உலக அளவில் நாம் பெற்றுக் கொண்டே வருகிறோம். ஆனால் அதற்கு ஏற்றார் போல் பல மாற்றங்கள் நம்முடைய பழக்கவழக்கம் உணவு அன்றாட நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இன்று ஒருவரை கூட கையில் செல்போன் இல்லாமல் பார்க்க முடியாது ஒருவரின் நிழல் போல மொபைல் போன்கள் மாறிவிட்டது! இவற்றைத் தவறு என்று கூறிவிட முடியாது ஏனென்றால் இன்றைய பொருளாதார தேவைகள் மற்றும் வளர்ந்துள்ள டெக்னாலஜியின் அதனை பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று ஆடைகளை எடுத்துக் கொண்டால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி உடுத்தி கொள்ளப்படுகிறது.
அதே சமயத்தில் குற்றங்கள் பக்கம் பார்க்கும் பொழுது முன்பு நடந்த குற்றங்களை விட தீவிரவாத குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று பார்த்தாலும் சமூகத்திற்கு நடக்கும் சில கொள்ளை, கொலை,.கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது! மேலும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் பார்க்கும் பொழுது முற்றிலும் வேறுபட்ட உணவை நாள்தோறும் எடுத்துக் கொள்கிறோம், இதேபோன்று நண்பருடன் வெளியே சுற்றுவது பார்ட்டிக்கு செல்வது பப் போன்றவற்றிற்கு செல்வது என பல பழக்கவழக்கங்களிலும் கொண்டுள்ளார்கள். ஆனால் இன்றும் சிலர் இதனை தவிர்த்து விரும்பாமல் இருக்கிறார்கள், விரும்பி செல்பவர்களும் தவறு செய்பவர்கள் என்று ஆகிவிட மாட்டார்கள். ஆனால் இது போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது நாமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏனென்றால் மேலை நாடுகளில் இருக்கும் பல உணவு முறைகள் பழக்க வழக்கங்கள் தற்போது நம்மிடம் அதிகமாகவே காணப்படுகிறது, உடையாக இருந்தாலும் சரி! உணவாக இருந்தாலும் சரி! வாழ்க்கையில் கூட லிவிங் டுகேதார் என்ற பழக்கவழக்கம் தற்போது பல இடங்களில் பார்க்க முடிகிறது கேள்வியும் பட்டிருக்கிறோம்.அதன்படியே அதிக அளவிலான இளைஞர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகா விட்டாலும் பார் மற்றும் பப் போன்றவற்றிற்கு செல்வதை பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி பப்பிற்கு வரும் ஆண்களை மயக்கி அவர்களிடமிருந்து எப்படி பணத்தை பறிப்பது என்ற ஒரு திட்டத்தை போட்டு ஹைதராபாத்தில் உள்ள பார் மற்றும் பப்பில் பல இடங்களில் இருந்து பெண்களை விலை கொடுத்து வாங்கி வரவழைத்து அந்த பப்பிற்கு வரும் ஆண்களை மயக்கி அவர்களை அதிக விலை உள்ள பொருட்களை வாங்க வைத்து பப்பிக்கு லாபம் ஏற்படும் வகையிலான செயல்களை மேற்கொள்ள அந்த பெண்களை பயன்படுத்தியுள்ளார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஹைதராபாத்தில் உள்ள இந்த பப்பிக்கு திடீரென்று சென்ற போலீசார் அங்கு நடப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியுற்று விசாரணைகளை மேற்கொண்டு அந்த பப் நிர்வாக அமைப்பு ஆண்களை மயக்குவதற்காகவே பெண்களை அங்கு பணியமத்தியுள்ளனர் என்ற விவகாரத்தையும் கண்டறிந்தது, இதனால் அதிரடியாக அங்கிருந்த அனைத்து பெண்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக இதே போன்ற சம்பவம் அதே சுற்று வட்டாரத்தில் இருந்த மற்றொரு பாரிலும் நடந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி தொடர்ச்சியாக இன்னும் பல சோதனைகளை அதிகாரிகள் அங்கு இருக்கும் பார் மற்றும் பப்பில் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.