sports

கனவிலும் நினைத்து பார்க்க முடியாத சம்பவம் பாக்கிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பெண்ணிற்கு கிடைத்தது !

cricket
cricket

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. இதில், சமீபத்தில் நடந்த போட்டியில் இந்தியாவை, பாக்., வென்றது. இந்த போட்டியில் பாக்., வென்றதைக் கொண்டாடும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நபீசா அட்டாரி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டார்.


இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்து பள்ளி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல்கலையில் படிக்கும் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், பாக்., வெற்றியைக் கொண்டாடினர்.

அதையடுத்து அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது ஆக்ரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விளையாட்டு போட்டி வெற்றியை கொண்டாடியதற்காக ஒருவரை கைது செய்யலாமா என கேள்வி எழுப்பும் நபர்களுக்கு இராணுவம் சார்ந்த செய்திகள் பக்கத்தை நடத்திவரும் பிரீத்திவி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை இந்தியாவில் கொண்டாடிய நபர்கள் யாரும் ஏன் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை வெடி வெடித்து கொண்டாடவில்லை, அவர்கள் பாகிஸ்தான் இந்தியாவுடன் பெற்ற வெற்றியை தான் கொண்டாட நினைக்கிறார்கள்.

எத்தனை உயிர்களை பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் இழந்து இருக்கிறோம் அப்படி இருக்கையில் கொஞ்சம் கூட நாட்டு பற்று இல்லாமல் எதிரி நாட்டின் சிறு வெற்றியை கொண்டாடுவதும் தேச துரோகமே என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினால் நம் வேலை பறிபோகும், பின்பு கைது செய்யபட்டு சிறைக்கு செல்வோம் என பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.