Tamilnadu

"போராட்டமே அறிவிக்கல உள்ளவச்சா என்னயா அர்த்தம் புரிஞ்சு போச்சு கதறும் நந்தினி !

nandini
nandini

முன்னாள் மது ஒழிப்பு போராளியும் தற்போதைய பாஜக எதிர்ப்பு போராளியுமான நந்தினியை தமிழக காவல்துறை வீட்டு காவலில் வைத்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார், நாங்கள் போராட்டமே அறிவிக்காத போது உள்ளவச்சா என்னயா அர்த்தம் எனவும் போராளியுமான நந்தினி கேள்வி எழுப்பியுள்ளார்.


கம்பிக்கு பின்னால் சோகமான முகத்துடன் நின்று கொண்டிருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து நந்தினி குறிப்பிட்டதாவது :-முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.21) மதுரை வருகிறார். இதற்காக நேற்று இரவு முதல் எங்களை வீட்டுச்சிறையில் வைத்துள்ளது காவல்துறை.

தமிழக அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் எதுவும் அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வருகிறோம்.இதை தடுப்பதற்காக காவல்துறை எங்களை கைது செய்வது, பிரசுரங்களை பறிமுதல்  செய்வது என பல இடையூறுகளை கொடுத்து வருகிறது.பிரதமர் மோடிக்கு எதிராக பிரசுரம் விநியோகித்தால் தமிழக காவல்துறை அடக்குமுறையை ஏவுவது ஏன்? என நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். இந்நிலையில் காவல்துறை எங்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது.

இதே போல கடந்த 02.10.21 காந்தி ஜெயந்தி அன்று முதல்வர் மதுரை வந்தபோது  RSS அமைப்பை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்" என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டிருந்தோம்.அதை தடுப்பதற்காக அப்போதும் காவல்துறை எங்களை வீட்டுச் சிறையில் வைத்தது. இப்போதும் அப்படி ஒரு முயற்சியை நாங்கள் எடுக்கலாம் எனக்கருதி காவல்துறை எங்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக கருதுகிறோம். அப்படி எந்த ஒரு திட்டமும் எங்களுக்கு இல்லை.

RSS- ன் பிடியில் வசமாக சிக்கியுள்ள முதல்வர் மு.க ஸ்டாலினிடம் RSS ஐ தடை செய்யக்கோரி மனு கொடுப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டோம். எனவே அப்படி எந்த முயற்சியும் நாங்கள் எடுக்கப் போவதில்லை என்பதை தமிழக முதல்வருக்கும் காவல்துறைக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வோம் நாட்டை காட்டுமிராண்டி காலத்துக்கு இட்டுச்செல்லும் பாசிச RSS-BJP க்கு 

எதிராக சட்டப்படியான, ஜனநாயகப்படியான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம். என குறிப்பிட்டுள்ளார்.இதில் ஹைலைட் என்னனா தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஆர் எஸ் எஸ் கையால் என முத்திரை குத்தி வந்த திமுகவையே, ஆர் எஸ் எஸ் அமைப்பு இயக்குகிறது என்ற அடிப்படையில் நந்தினி பேசியிருப்பது, உங்களுக்கெல்லாம் பாஜகவையும், ஆர் எஸ் எஸ் அமைப்பையும் விட்டால் வழியே இல்லையா என கேட்க தோன்றும் அளவில்தான் உள்ளது நந்தினி போன்றோரின் செயல்பாடு.