பாஜக இல்லை என்றால் அதிமுக வென்றிருக்கும்,பாஜக இல்லை என்றால் திருமா அதிமுக கூட்டணிக்கு வருவார் என்றெல்லாம் தொடர்ச்சியாக ஒரு அரசியல் புலனாய்வாளர் பேசி வருகிறார், இன்று கூட்டணி கட்சிகளை ஒரு பொருட்டே இல்லாமல் ஆக்கிவிட்டது திமுக.தமிழகத்தில் 'திமுக - அதிமுக - பாஜக' இந்த மூன்று கட்சிகளுக்குள்தான் அரசியல் என்ற நிலை வந்துவிட்டது.
இதில் அதிமுகவும்,பாஜகவும் ஒரு தரப்பாக உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவானது,மோடி மற்றும் அதிமுக எதிர்ப்பிற்கு உருவமுள்ள தலைவரைக் கொண்டுள்ளது.பொய்யாக உருவாக்கப்பட்ட மோடி எதிர்ப்பு குரலும்,சிறுபான்மை வாக்குகளும் திமுகவோடு இரண்டற கலப்பதை திமுக கூட்டணிக் கட்சிகள் விரும்பவில்லை.
தங்களுடைய பார்கெயினிங் பவர் அடியாழத்தில் போய்க்கொண்டிருப்பதை தேக்கி நிறுத்தும் சக்தி இன்று இல்லையென நினைக்கிறார்கள்..கருணாநிதி Vs ஜெயலலிதா என்கிற பிம்ப அரசியல் யுத்தத்தில் குளிர்காய்ந்த காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சிகள் இன்று அரசியல் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்..
2019 ல் மோடி மீண்டும் வென்று வரமாட்டார் என மக்களை குழப்பிய தேர்தலிலேயே 10 சீட்டுதான் காங்கிரஸிற்கு கொடுத்தார் ஸ்டாலின்.2024 ல் அது எவ்வளவு மோசமாக போகும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.மற்ற அனைத்து கூட்டணிகளையும் உதயசூரியன் சின்னத்தில்தான் நிறுத்துவார் என்பது தெளிவானது.
அதே சமயம் ஆட்சிக்கு எதிரான மனநிலையை அதிமுகவும்,பாஜகவும் அறுவடை செய்து ஒரு பெரிய கூட்டணியை போட்டு வென்றுவிட்டால்,இவர்களுடைய மோடி எதிர்ப்பு புருடா எல்லாம் வெடித்து சிதறிவிடும்.திமுகவே இவர்கள் விரித்து வைத்திருக்கும் வலையில் நடத்தும் அரசியல் பின்னலை,கிழித்தெறிந்து வேறு பாதைக்கு சென்றுவிடும்..
ஒரே நேரத்தில் களமும்,கருத்துருவாக்கமும் ஒன்றுசேர அடிவாங்கும் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் இதரர்களுக்கு..இதை தடுத்து நிறுத்தவும்,தங்களை காத்துக்கொள்ளவும்,திமுகவை மிரட்டவுமே இந்த கூட்டணிகள் அதிமுகவிடம் லாபி செய்ய ஆரம்பித்துள்ளது.
மோடி அடிமை,ஆர்எஸ்எஸ் அடிமை என்றும்,எடுபுடி என்றும் கேவலமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த அதே கும்பல் பாஜக இல்லை என்றால் அதிமுக வென்றிருக்கும் என இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்..
2024 தேர்தலானது யார் பிரதமர் என்பதுதான்..இந்தியாவே ஒருங்கிணைந்து மீண்டும் அசுர மெஜாரிட்டியில் மோடியை அரியணை ஏற்றப்போவது முடிவு செய்யப்பட்டது.அதில் தமிழகமும் தன்னை இணைத்துக் கொள்ளப்போவது உறுதி.இந்த நேரத்தில் அதை குழப்பி தங்களை காத்துக்கொள்ள அதிமுகவை பலிகிடாவாக்க பல கழுகுகள் சுற்றி வருகிறது..பார்ப்போம். முகநூல் பதிவு - சுந்தர்ராஜ சோழன்