தனியார் ஊடகத்தில் நடைபெற்ற விவாதத்தில் சுந்தரவள்ளி பேசிய பேசிய பேச்சுக்கள் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, சுந்தரவள்ளியா இது அரசின் மீதான நம்பிக்கை தன்மை குறைகிறதே என பேசி இருப்பது சரியா? திமுகவினர் எத்தனை உதவிகள் செய்து இருப்பார்கள் என புலம்பி வருகின்றனர் திமுகவினர்.
தனியார் பத்திரிகையான விகடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஆர்ப்பாட்டத்தின் விளைவாக தனியார் ஊடகம் ஒன்றில் இது குறித்து விவாதம் நடைபெற்றது, இந்த விவாதத்தில் கலந்து கொண்ட சுந்தரவள்ளி நேரடியாக ஆளும் அரசான திமுகவை குற்றம் சுமத்தி பேசினார்.
பத்திரிகை மற்றும் மற்ற இருவர் மீது போடபட்டு வழக்கில் எந்த வித முகாந்திரமும் இல்லை என்பது நேரடியாக தெரிகிறது, மாரிதாசிற்கும் சவுக்கு சங்கருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என கேள்வி எழுப்பி இருக்கிறார் சுந்தரவள்ளி இந்த விவாதத்தை பார்த்த திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை வாழ்த்தி வரவேற்ற சுந்தரவள்ளி போன்றோர் இப்படி திடீர் என பல்டி அடித்து விட்டார்களே என ஒரு சில திமுகவினர் வேதனையில் புலம்பி வருகின்றனர். இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து சுந்தரவள்ளி ஏதேனும் ஆதாயம் தரும் அரசு பொறுப்பு அல்லது குழுவில் இடம் கிடைக்கும் என எதிர் பார்த்து வந்தார்.
ஆனால் அவ்வாறு எந்த குழுவிலும் இடம் கிடைக்காத காரணத்தால் சுந்தரவள்ளி இது போன்று திமுக அரசிற்கு எதிராக பேசி இருக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுந்தரவள்ளி விவாதத்தில் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :