தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "அயலான்" இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் எம்ஜிஆருக்கு அப்புறம் நான் தான் என்று சிவகார்த்திகேயன் பேசியது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்றி நாளடைவில் தனது முன்னணி நடிகரின் மெமிக்கிரி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் சிவகார்த்திகேயன், இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஹீரோவுடன் சிறிய ரோலில் நடித்து, அதன் பின் ஹீரோவாக அறிமுகமானார்.பள்ளி பயிலும் காலத்தில் தந்தையை இழந்த சிவகார்த்திகேயன் கடும் உழைப்பின் மூலம் திரைக்கு வந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் பார்க்கும்பொழுது நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
அந்த வகையில் இந்த ஆண்டு திரைக்கு வந்த படம் மாவீரன், இதில் வித்தியாசமான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார் நடிகர் சிவகார்த்திகேயன், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டீசர் புதிய கதைக்களமாக அமைத்துள்ளது வானில் இருக்கும் ஏலியனை நடிக்க வைத்துள்ளது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகயேன் கலந்து கொண்டு பேசியது, "தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருந்தோம். ஆனால் சின்ன சின்ன வேலைகள் இருந்ததால் பொங்கலுக்கு தள்ளி வைத்தோம். இந்த படத்தை மொத்தமாக 95 நாட்களில் முடித்துவிட்டோம். அயலானுக்கு டியூன் போட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், தற்போது புதிதாக வேறு டியூன் போட்டு தருவதாக ஏர் ரகுமான் கூறியது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் ஏலியனை வைத்து எம்ஜிஆர் ஒரு படத்தை நடித்திருந்தார். அதனை வருடம் கழித்து நாம் தான் அடுத்ததாக படத்தை இயக்குகிறோம் என்றார். இதனால் யூட்டுபர்ஸ் "எம்ஜிஆர்க்கு அடுத்து நான் தான் சிவகார்த்திகேயன் சொன்னது போல் போடா வேண்டம் என்று நகைச்சுவையாக பேசினார்.
இந்த படத்தில் பணி செய்தவர்கள் அணைவரும் தமிழ் தான். ஏலியன் படம் என்றால் வெளிநாட்டு குழுக்களை கொண்டு கிராபிக்ஸ் செய்திருப்போம் என்று என்ன வேண்டாம். முழுக்க முழுக்க தமிழ் டெக்னீஷனை கொண்டு முடித்துள்ளோம். இந்த படத்தில் குழந்தைகளுக்கு தவறான விஷயத்தை புகுத்தும் படமாக இந்த படம் இருக்காது. இந்தியாவிலேயே இதுமாதிரி படம் வந்ததே இல்லை என்றும் இது தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக நிச்சயம் இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்".2024ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது .