Cinema

இமான் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன்...? வெளியான வீடியோ!

imman, sivakarthikeyan
imman, sivakarthikeyan

சின்னத்திரையில் நடிப்பை தொடங்கிய சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் பல படங்களில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில இவரது நடிப்பில் வெளியான அயலான் படம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்க்கு எதிராக அயலான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது கமலஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் மீது கடந்த வருடம் இமான் ஒரு குற்றச்சாட்டு வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை உருகி செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


சிவகார்த்திகேயன் தமிழ்சினிமாவில் குறுகிய மாதத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தற்போது உள்ள அஜித், விஜய்க்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் இருக்கிறார் என ரசிகர்களால் கூறப்பட்டது. விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் சிவகார்திகேயனனும் அடுத்ததடுத்து படங்களை கமிட் செய்துவந்தார். அப்போது இசையமைப்பாளர் இமான் திடீரென்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது 'இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து சிவகார்த்திகேயனிடமும் நான் நேராகவே கேட்டுவிட்டேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த பேச்சு வைரலாக சிவகார்த்திகயேன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வந்தது. அதாவது, இமானின் முதல் வாழ்க்கையில் இமான் மற்றும் அவரது மனைவி மோனிகாவும் பிரிவதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என பேசப்பட்டது. பிரபல வலைபேச்சாளரும் இது குறித்து ஓப்பனாக பேசியிருந்தார். ஆனால், சிவா இது குறித்து எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. அதன் பிறகு நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு சிவகார்திகேயன் உதவி செய்யாமலே அசிங்கப்படுத்தியதாக கூறியாததாக தெரிவித்ததும் சிவா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வந்தது.

இந்தநிலையில், சிவகார்த்திகேயன் எப்போது ஒருமுறை பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 'நான் இமான் அண்ணா குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறேன். அவரை நான் அண்ணா என்றும் அவரது மனைவி மோனிகாவை அண்ணி என்றும்தான் அழைப்பேன். இப்போதெல்லாம் இமான் அண்ணாவுக்கு ஃபோன் பண்றேனோ இல்லையோ அண்ணிக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் செய்துட்டே இருப்பேன். அவங்களோ, ஏன் கொழுந்தனாரே இப்படி பண்ணுறீங்க என சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு'' என்றார். சிவகார்திகேயனனின் இந்த வீடியோவை சமூகத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. 

முன்னதாக இமானின் குற்றச்சாட்டு குறித்து அவரது முன்னாள் மனைவி அளித்த விளக்கத்தில், 'சிவகார்த்திகேயன் பற்றி இமான் சொன்னதை வெளியில் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அவர் ரொம்பவே நல்லவர். எனக்கும், இமானுக்கும் பிரச்சனை வந்தபோது சிவகார்த்திகேயன் நியாயத்தின் பக்கம் நின்றார். என விக்கலாம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும், சிவகார்த்திகேயனின் அந்த பேச்சுக்கு கடும் கண்டனம் கொடுக்கப்பட்டு பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மீண்டும் சிவகார்த்திகேயன் இமான் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் படம் தான் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.