Tamilnadu

"பணி நேரத்தில்" கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் கிடையாது,அண்ணாமலை வேதனை !

Annamalai's Worry about SI murder in Pudukottai
Annamalai's Worry about SI murder in Pudukottai

உதவி காவல் ஆய்வாளர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-


"திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது!  கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது,

இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும்! அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அண்ணாமலை தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன், நேற்றிரவு கீரனூர் அடுத்த பள்ளப்பட்டியில் ஆடு திருடுபவர்களை விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.இதில் நடந்த மோதலில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மாநில அரசு முழுமையான நடவடிக்கையில் இறங்கி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அறங்கேறாத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எண்ணமாக உள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.