பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தலைநகரில் நடைபெற்ற விவசாய போராட்டத்தின் விளைவு என்ன என்பது குறித்தும் என்ன நடந்தது, சட்டத்தை விலக்கி கொள்ளவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும், இனி என்ன நடக்கும் என வரலாற்று சம்பவங்களை சுட்டி காட்டி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
கட்டபொம்மனுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே சீக்கிய இனத்தை குறிவைத்திருந்தான் வெள்ளையன் காரணம் அவர்களின் ஒருமாதிரியான அணுகுமுறையும் போர்குணமும் வித்தியாசமான போர்குணமும் அவனை சிந்திக்க வைத்திருந்தன.மராட்டிய பேரரசை போலவே சீக்கிய பேரரசையும் கண்டு வெள்ளையன் அஞ்சிய காலம் இருந்தது, பின் காலம் பார்த்து வளைத்து போட்டாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கொண்டே இருந்தான்
சுதந்திர போராட்டம் கொளுந்துவிட்டு எரிந்த இடங்களில் பஞ்சாப் முக்கியமானது, அந்த மாகாணத்தை அப்படியே இந்தியாவிடம் விட்டு விட்டு சென்றால் எதிர்காலத்தில் அது மிகபெரிய பலமாக இந்தியாவின் கரங்களை தாங்கும் என திட்டமிட்டுத்தான் அதை இரண்டாக உடைத்து லாகூரை பாகிஸ்தானுக்கு கொடுத்தான் வெள்ளையன்
காரணம் லஜ்பதி ராய், பகத்சிங், உத்தம்சிங் என அவன் கண்ட காட்சிகள் அப்படி , சீக்கிய பெண்களின் வீரம் கூட அவனை அச்சுறுத்தியது.ஜாலியன் வாலாபாக்கில் அவன் அத்தனையாயிரம் பேரை கொன்று அச்சுறுத்தினாலும் அந்த இனம் சவால் விட்டு சுதந்திர தீயினை வளர்த்தது
வெள்ளையன் இந்தியாவின் தூண்கள் என கருதிய, அதாவது பிராமணர், வங்கத்தவர், தமிழகத்தின் சில இனங்கள் வரிசையில் சீக்கியரும் இந்நாட்டின் மிகபெரிய காவலர்கள் என்பதை உணர்ந்திருந்தான்.இவர்களுக்கு எதிரான அரசியலே இங்கு இந்நாட்டை குழப்பி அடிக்கும் என்பதை மிக நுணுக்கமாக உணர்ந்திருந்தான்
உண்மையில் லாகூர் எனும் சீக்கிய தலைநகர், ஈழதமிழருக்கு யாழ்பாணம் போல சீக்கியர்களுக்கு முக்கியமான அந்த நகரம் பாகிஸ்தானிடம் சிக்கியிருக்க நியாயமே இல்லை.தமிழர் போல உலகெல்லாம் பரந்து விரிந்த சீக்கிய இனம் இந்தியாவினைத்தான் நேசித்தது, இந்தியாவினைத்தான் தங்கள் தாய்மண்ணாக கருதினார்கள், இன்றுவரை அப்படித்தான் இருக்கின்றார்கள்.
இதனால்தான் இந்திய அரசுபணி முதல் ராணுவம் வரை அவர்கள் தாங்கி நிற்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்குரிய அங்கீகாரம் இங்கே மறுக்கபட்டது, இது மதசார்பற்ற நாடு என அவர்கள் ஒருவகையில் இந்திராவினால் மிரட்டபட்டார்கள்.இந்திரா செய்த அந்த புறக்கணிப்புத்தான் அவர்களுக்கு வலிகொடுத்தது, அந்த வலியில் அவர்கள் அழும்பொழுதுதான் சர்வதேச சக்திகளும் பாகிஸ்தானும் உள்ளே புகுந்து குட்டையினை குழப்பின.
பாகிஸ்தானை ஒட்டிய எல்லை என்பதால் அவர்களால் உள்ளே எளிதில் வரமுடிந்தது, வந்து குழப்பினார்கள் "காலிஸ்தான்" எனும் கோஷம் எழுந்தது.அதை இந்திரா சுலபமாக முடித்திருக்கலாம் ஆனால் சீக்கிய மதத்தை அவர் ஒருமாதிரி இழுத்தடித்து அவர்கள் உணர்ச்சியுடன் விளையாடியதில் அங்கு ரத்த ஆறு ஓடிற்று,
அதில் உலகளாவிய அளவில் சீக்கியருக்கும் இந்திய அரசுக்குமான யுத்தம் வெடித்தது, என்னென்னவோ நடந்தன.பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பி இந்தியா சர்வாதிகாரம் காட்டியதில் அங்கு நிலமைகட்டுபடுத்தபட்டாலும் அந்த கொடுமை இந்திரா உயிர்வரை தொட்டது
இதன் பின் சீக்கிய இந்திய உறவுகள் கசந்தன எனினும் மெல்ல மெல்ல இயல்பானது, காங்கிரசும் மன்மோகன்சிங் எனும் சீக்கியரை முதல் சீக்கிய பிரதமராக்கி அவர்கள் கோபத்தை தணித்தது.இப்படி எல்லா கசப்பும் முடிந்தபொழுதுதான் விவசாயிகள் பிரச்சினையில் பல சக்திகள் மறுபடி குதித்தன, பழைய காலிஸ்தான் கோஷ்டிகளெல்லம துள்ளி எழுந்தன.
இந்த காலிஸ்தான் கோஷ்டிகளும் பஞ்சாபியரும் லண்டனில், கனடாவில், அமெரிக்காவில் அதிகம். இந்த நாசமாய் போன ஜனநாயகத்தில் வாக்கு இருந்தால் அங்கு அந்நாட்டு அரசுகள் செவிசாய்ப்பது தவிர வேறு வழியில்லை.இதனால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் சிக்கல்கள் எழுந்தன, கன்டாவும் அமெரிக்காவும் இவ்விவகாரத்தில் சீக்கியர் பக்கமே சாய்ந்தன.
மிக முக்கியமாக கமலா ஹாரீஸ் இந்த கோஷ்டிகளால் வளைக்கபட்டு அவரின் பரிபூரண ஆசி சீக்கிய கோஷ்டிக்கே இருந்தது, சீன முறுகல் நிலையில் இந்திய ஆதரவு வேண்டும் எனும் ஒற்றை காரணத்துக்காக அமெரிக்கா அமைதி காத்தது.இந்நிலையில் ஆப்கனில் காட்சிகள் மாறின, ஆப்கானிய தாலிபன்களை ஒரு சீக்கியனாக வடிவமைப்பது மிக எளிது, தாடியும் டர்பனும் கட்டிவிட்டால் ஒரு வித்தியாசம் கூட பார்க்க முடியாது.
ஆப்கானிய தாலிபன் ஊடுருவல் பாகிஸ்தான் வழியாக இங்கே வரும் ஆபத்து இருந்தது, வந்தவர்கள் ஒரு சிறிய வன்முறையில் ஈடுபட்டாலும் நிலமை கலவரமாகும் இந்திய ராணுவம் களமிறங்கும் அதன் பின் மிக பெரிய குழப்பமே மிஞ்சும்,முன்பு பொற்கோவில் சம்பவம் வேறு, அப்பொழுது இவர்கள்தான் தீவிரவாதிகள் என ஒரு கோஷ்டி கோவிலுக்குள் அடையாளம் காணபட்டது, ஆனால் இங்கே அப்படி அல்ல,
இங்கு விவசாயி என வந்திருப்பது முன்னாள் ராணுவத்தினர் ஏகபட்டோர் உண்டு, இவர்கள் மேல் கைவைத்தால் இந்திய ராணுவம் உடையும்.இது முதலில் சாதாரண போராட்டமாகத்தான் தொடங்கிற்று ஆனால் பின்னாளில் சீனா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா என தொடர்புகள் வலுத்தன.
தீவிரவாதிகள் உள்ளே வந்து பெரும் கலவரம் நிகழ்த்த வாய்ப்பு இருப்பதாக உளவுதுறை சொல்ல, இன்னொரு பக்கம் பஞ்சாப் முதல்வரே ஆயுத கடத்தல் அதிகரிப்பதை சொல்ல விஷயம் எகிறிற்று.கூடவே பஞ்சாபில் அரசியல் குழப்பம் ஏற்பட்டால் நிலமை கூடுதல் குழப்பமாகும் என்பதால் அம்ரீந்தர் சிங்குக்கு எதிரான அரசியல் ஆட்டம் ஆரம்பமானது.
வழக்கம் போல் காங்கிரஸ் அந்த குழப்பத்துக்கு துணைபோனது, நிலமை இன்னும் மோசமாயிற்று,இந்நிலையில்தான் அமித்ஷா அம்ரீந்தர் சிங் சந்திப்பு நடந்தது, சுத்தமான இந்தியனா அம்ரீந்தர் சிங்தான் நிலமையின் தீவிரத்தை சொன்னவர் நிலமை எல்லைமீறி செல்லாமல் இருக்கவும், இந்திரா செய்த அதே தவறை செய்யாமல் தவிர்க்கவும் அரசுக்கு உளவுதுறைகள் அறிவுறுத்தின.
நாட்டு நலமே பிரதானமாக எண்ணும் மோடி அதை செவ்வனே செய்தார்.இப்பொழுது முதல் அவசியம் உலகளாவிய சீக்கிய தொடர்புகளை காட்சிக்குள் இருந்து விரட்டுவது அதற்கு தேவை இங்கே ஒரு அமைதி அது வந்தாயிற்று, இனி ஒவ்வொருவராக கட்டம்கட்ட படுவார்கள், முதல் குறி கமலா மாமியாக இருக்கலாம், நேற்றில் இருந்து அமெரிக்காவில் கமலா பதவிநீக்கம் செய்யபட்டு சட்டதுறைக்கு அனுப்பபடலாம் பிடனின் நிர்வாகம் அவர்மேல் அதிருப்தியில் இருக்கின்றது எனும் செய்தி கசிவதை காணலாம்.
இப்போதைக்கு இந்தியா அழகாக தன்மேல் வீசபட்ட சதியினை முறியடித்திருகின்றது,இதற்கு காரணம் மூவர் : முதலாவது அஜித் தோவல் 1980களில் பஞ்சாபில் களத்தில் இருந்தவர் அவர்தான், ரிக்சா இழுக்கும் தொழிலாளியாக, ஹோட்டல் சர்வராக, கார் டிரைவராக மாறுவேடமிட்டு பஞ்சாப் சீக்கியரின் ஒவ்வொரு அசைவும் அன்றே அறிந்தவர், இதனால் இந்த சிக்கலை கையாள்வது அவருக்கு எளிதாயிற்று.
இரண்டாவது அந்த நாட்டுபற்றுள்ள முன்னாள் ராணுவவீரன் அம்ரீந்தர் சிங்,அவர் மட்டும் ஈழபுலிகளுக்கு கருணாநிதி காட்டிய தயவினை தன் மக்கள் என பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மேல் "இனகாவலன்" இமேஜை பஞ்சாபில் காட்டியிருந்தால் நிலமை மகா மோசமாயி விபரீதம் நிகழ்ந்திருக்கலாம்.
மூன்றாம் நபர் பிரதமர் மோடி, அரசியல் கட்சி இமேஜ் இன்னும் வறட்டு குருட்டு அகங்காரமில்லாமல் "நான் செய்த முடிவை சரிசெய்ய எனக்கு தெரியும்" எனும் கர்வமில்லாமல் மிக இயல்பாக நாட்டுக்கு எதை செய்யவேண்டுமோ அதை செய்தார்.இதனால் வரலாறு காணாத கலவரமும் மாபெரும் குழப்பமும் தடுக்கபட்டது.
இந்த மூவரால் மிகபெரிய அசம்பாவிதத்தை தவிர்த்து எதிர்கோஷ்டியினரின் சதியினை தவிடு பொடியாக்கிவிட்டு தேசம் மிக பெரிய அமைதியில் தன்னை நிறுத்திகொண்டது, இம்மூவரும் செய்திருக்கும் பெரும் சேவைக்கு ஆயிரம் பாரத ரத்னா கொடுத்தாலும் ஈடாகாது என மிகவும் உணர்ச்சி பூர்வமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஸ்டான்லி ராஜன்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.