விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் நோக்கத்தைப் பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும், இன்னும் பலன்களைப் பெறாதவர்களை உள்ளடக்குவதும் இதன் நோக்கமாகும் என்றார்கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பண்ணை இயந்திரங்கள் வங்கித் திட்டம் மற்றும் கிசான் சம்மன் நிதி யோஜ்னா போன்ற பல அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற்றுள்ளதாக, பெண் விவசாயி ஒருவர் பிரதமரிடம் தெரிவித்தார்.
உரையாடலின் போது, யாரோ ஒருவர் அப்பெண்ணை தள்ளினார், அப்போது பிரதமர், புதிதாக வருபவர்களால் தள்ளப்படுவதால், அவரது நாற்காலியை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.தனது கிராமம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் அந்த பெண் மேலும் கூறினார் கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட டிராக்டரின் உரிமையாளராக இருப்பதற்காக மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை’ என்றும் பிரதமர் அவரிடம் நகைச்சுவையாக கூறினார்.
பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தில் மருந்தக மையங்களில் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ஆண்டு அதிகரிக்கப்படும் என பிரதமர் அறிவித்தார் ஏழை எளியவர்கள் மூத்தவர்கள் என எல்லோரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் மருந்தககள் கிடைக்க பாரதிய மக்கள் மருந்தக மையங்கள் நிறுவப்பட்டது. சுகாதாரத்தை குறைந்த கட்டணத்துடன் எளிதில் அணுக கூடியதாகவும் மற்றும் ஆரோக்கியமான இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வையில் ஜார்க்கண்ட் மாநில தியாகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்தாயிரம் ஆவது மக்கள் மருந்தகம் மையத்தை பிரதமர் மோடி காணொளி வழியாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும் மக்கள் மருந்தக மையங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கவும், வளர்ச்சியடைந்த இந்தியா சபத பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல்இருந்து, 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் ட்ரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேலும், மகளிர் ட்ரோன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில், தேர்வு செய்யப்பட்ட 15,000 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ட்ரோன்களும், இவற்றை இயக்க பயிற்சியும் அளிக்கப்படும். அதன்பிறகு, விவசாய பணிகளுக்கு ட்ரோன்கள் வாடகைக்கு விடப்படும். ‘‘இதன்மூலம் ட்ரோன்களை இயக்கும் பெண் பைலட்களுக்கு கிராமங்களில் மரியாதை கிடைக்கும். அவர்களின் நிதி நிலையும் மேம்படும். என்னை பொருத்தவரை, ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் இந்த 4 மிகப் பெரிய சாதியினர். இவர்களின் வளர்ச்சிதான் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்’’ என்று விழாவில் பிரதமர் கூறினார்.