வெச்சான் பாரு ஆப்பு! இனி தங்க நகைக்கடன் இவர்களுக்கு கிடையாது! ஏன்? கூட்டுறவு துறை அதிரடி!bank loan
bank loan

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தங்க நகை கடன் வழங்கி வருவதில் ஒரு சில மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றது கூட்டுறவு துறை.

தற்போது கூட்டுறவு துறையின் மூலமாக பல்வேறு நபர்கள் தங்களது நகைகளை வைத்து கடன் பெறுகின்றனர்.மேலும் விவசாய கடனும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை கடன் பெறமுடியும். கூட்டுறவு வங்கியை பொருத்தவரையில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் தனியார் வங்கிகளில் கடன் மீதான வட்டி விகிதத்தை விட கூட்டுறவு வங்கியில் மிகக்குறைவு.

இதன் காரணமாக பல்வேறு நபரும் பண பரிவர்த்தனைக்கு மற்ற தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் கடன் பெறுவதற்கு கூட்டுறவு வங்கியை நாடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அடகு கடை நடத்துபவர் கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் பொதுமக்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வருவதாக பல்வேறு இடங்களில் புகார் எழுந்து இருக்கின்றது.

அதாவது அவசரத்துக்கு அடகு கடைக்கு சென்று நகை வைத்து பணம் பெறும் போது அதற்கான வட்டி விகிதம் அதிகம். அவ்வாறு பெறப்படும் நகைகளுக்கு பதிலாக அடகு கடை வைத்திருப்பவர்கள் அவர்களது முதலீட்டு நகைகளை எடுத்துச் சென்று கூட்டுறவு வங்கியில் வைத்து கடன் பெறுகின்றனர்.அந்தப் பணத்தை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டிக்கு விடுகின்றனர்.

இதுபோன்ற முறைகேட்டில் கூட்டுறவு சங்க தலைவர்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரே ஈடுபட்டு இருப்பது தான் பெரிய அதிர்ச்சியான ஒரு விஷயம். இந்த நிலையில் இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக கூட்டுறவு நிறுவனங்கள் அடகு கடை நடத்துபவர்களுக்கு கடன்களை வழங்க கூடாது என்றும் அதை மீறி வழங்கினால் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 மேலும் இதன் மீதான ஆய்வும் செய்யப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கின்றது என்பது கூடுதல் தகவல். மேலும் ஏற்கனவே தங்க நகை கடன் வைத்து தற்போது தள்ளுபடி செய்யப்படும் என பொது மக்கள் காத்திருக்கும் தருணத்தில் திமுக தலைமையிலான ஆட்சி இது போன்று பல உத்தரவுகளை பிறப்பித்து வருவதால் இப்போது தங்க நகை கடன் தள்ளுபடி ஆகுமா இல்லையா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

Share at :

Recent posts

View all posts

Reach out