'ஸ்டாலின்' 'உருகி உருகி" பேசியது எதற்கு என இப்போதுதான் தெரிகிறது பங்கம் செய்த விபி துரைசாமி !vp duraisamy
vp duraisamy

பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வி பி துரைசாமி ஒரு நேர்காணலில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து உள்ளார். அதன் படி, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து பாஜக வளரவில்லை என கூற முடியாது.

திமுக எப்படி வெற்றி பெற்றது என்பது எல்லோருக்குமே தெரியும். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி இல்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உருகி உருகி பேசுகிறார் ஆனால் பிறகு தான் தெரிந்தது அவர் பேசியது அனைத்தும் தங்கத்தை உருக்கத்தான் என்று... என என்று சற்று கிண்டலாக தெரிவித்து இருக்கின்றார். 

வேண்டுதலின் அடிப்படையில் இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் தங்கத்தினை உருக்குவதால் செய்கூலி சேதாரம் என ஊழல் ஏற்படும். பொதுமக்கள் பலரும் கடவுளை வேண்டிக் கொண்டு தங்களது தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அப்படிப் பார்க்கும்போது மனதளவில் பெரிதும் பாதிக்கப் படுவார்கள். எனவே அந்த காணிக்கைகளை அப்படியே வைக்க வேண்டும். இந்த திட்டத்தை முதல்வர் அவர்கள் இன்றே நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய துரைசாமி, நீட் தேர்வு பற்றி தெரிவிக்கும்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்கு சென்றாலும், எப்படியும் நீட் தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டு பேசி வருகிறார். ஆனால் உண்மையில், மாணவ செல்வங்களை ...புரிந்துகொள்ளுங்கள். நீட் கட்டாயம் ரத்து செய்ய முடியாது. இது தெரியாமல் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு படிக்காமல் இருக்கக் கூடாது என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அறிக்கையை மிக முக்கியமானதாக கருதப்படும் திமுக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குகிறது என்றால் மாநில அரசும் மத்திய அரசும் அதனை நிறைவேற்ற வேண்டும். அப்படி நீட் தேர்வு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகு அதற்கு எதிராக ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு கமிட்டி அமைத்ததே ஒரு தவறான விஷயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஐந்தே மாதத்தில் செய்து முடித்துவிட்டதாக பெருமை பேசிக் கொள்கிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் பாதி அளவு  நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் எதையாவது ஒன்றை முழுமையாக செய்துவிட்டதாக அவர்களால் சொல்ல முடியுமா? இன்னும் எத்தனையோ மக்கள் நகை கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர், அதுவும் செய்யவில்லை, மாணவர்கள் கல்விக்கடன் பெற்றிருக்கின்றனர் அவர்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதை எதுவும் செய்யாமல் பெருமை பேசுவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு தலையை வெட்டி எடுத்துச் செல்லும் அளவுக்கு ஒரு மனிதனின் மன நிலைமை இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்குசீர்கெட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இதன் காரணமாகத்தான் பாரதிய ஜனதா கட்சியாகிய நாங்கள் ஆளுநரை சந்தித்து மேமோரண்டம் கொடுத்து இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கு எதிர்க்கட்சி என்றால் செயலின் அடிப்படையில் அது பாஜகதான் என உறுதிபட குறிப்பிட்டிருக்கின்றார்.

Share at :

Recent posts

View all posts

Reach out