தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி தனது மோசடி வழக்குகளால் அமலாக்கத் துறையிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமலாக்க துறையின் ஐந்து நாட்கள் விசாரணையின் பொழுது அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்தையும் செந்தில் பாலாஜி முக்கியமான தகவல்களை அமலாக்கத்துறையிடம் பகிர்ந்ததாகவும், பணம் பற்றிய தகவல்களைக் கேட்ட பொழுது அவை அனைத்தும் பண பரிமாற்றம் பற்றிய தகவல்கள் அனைத்தும் தனது தம்பிக்கு தெரியும் என்று செந்தில் பாலாஜி கூறியதும் அறிவாலய தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் பொல்லாதவராகவும் மோசடிக்காரராகவும் திமுகவின் பார்வைக்கு தெரிந்த செந்தில் பாலாஜி தற்போது நேர்மையானவராகவும் நியாயவாதியாகவும் தெரிகிறார் அவரைக் காப்பாற்றுவதற்கு தற்போது தமிழக அரசே முன்வந்து அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அவரை கைது செய்தால் இங்கு முதல்வருக்கு கோபம் வருகிறது என்ற பல விமர்சனங்கள் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார், அந்த பேட்டியில் நெறியாளர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் திமுக பின்னடைவை சந்தித்திருக்கிறதா என்ற வகையில் கேள்வி எழுப்பி உள்ளார் அதற்கு திருமாவளவன் கட்டாயமாக, பாதிப்பு இருக்கிறது ஆனால் பிஜேபி அதில் தங்களுக்கு ஏற்றார் போல் காய்களை நகர்த்தி திமுகவிற்கு ஒரு டேமேஜ்யை ஏற்படுத்தி உள்ளது என்று பதில் அளித்தார் அதற்குப் பிறகு நெறியாளரால் ஒரு அப்பழுக்கற்றவராக செந்தில் பாலாஜியை பார்க்க முடியுமா? என்று கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது அதற்கு அப்பழுக்கற்றவரா என்பது பற்றியது அல்ல இந்த விவாதம், இல்லை கிடையாது என்பது போன்று திருமாவளவன் மழுப்பியது அறிவாலயத்தை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை வழக்குகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் சிறை தண்டனைகளில் இருந்து சற்று விடுவிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு எந்த ஒரு பொறுப்பையும் வழங்காமலும் இலாகா இல்லாத அமைச்சராக அவரை நியமித்து அவரை திமுக பார்த்து பார்த்து வைத்திருக்கும் நிலையில், தங்களது கூட்டணியில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜியை அப்பழுக்கற்றவரா என்பதற்கு இல்லை கிடையாது என்பது போன்று திருமாவளவன் கூறியது வேறு அறிவாலய வட்டாரத்தை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது எனவும் இது வரும் காலங்களில் கூட்டணி கட்சிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்த காரணமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு கருத்து அரசியல் வட்டாரங்களை நிலவிவர இத்தனை நாட்களாக மறைமுகமாக தனது கட்சியினருக்கும் கட்சியின் நிகழ்வுகளுக்கும் ஆதரவு தருவது போல எதிர்ப்புகளை செலுத்தி வந்தது திராவிட மாடல் அரசுக்கு எதிராக தற்பொழுது திருமாவளவன் செயல்பட தொடங்கி விட்டார் ஏனென்றால் வேங்கை வயல் பிரச்சனையில் அமைதியானது போல் நாங்குநேரி பிரச்சனையிலும் ஒரு போராட்டத்தை தவிர வேறு எதையும் நம்மால் செய்ய முடியவில்லை இனிமேலும் அமைதி காக்காமல் சான்ஸ் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தனது கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருமாவளவன் இது போன்ற கருத்துக்களை கூறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் திருமாவளவன் 3 எம்.பி சீட்டு எதிர்பார்க்கிறார் ஆனால் திமுகவோ ஒரு எம்.பி சீட்டுதான் தர தயாராகவுள்ளது. இதன் காரணமாகத்தான் திருமாவளவன் அவ்வப்போது திமுக கூட்டணியில் முரண்டுபிடிக்கும் கருத்துக்களை கூறி வருகிறார் எனவும் அரசியல் விமர்சகர்களால் சில தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.