சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் கடந்த 20ஆம் தேதி இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது, நீட் தேர்வு என்பது கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே ரத்து செய்ய வேண்டும் என பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பெரும்பாலான ஓட்டுக்கள் திமுகவை வந்து சேர்ந்தன.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்த திமுக கட்சியை பார்த்து மக்கள் அனைவரும் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்த நிலையில் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்
மேலும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தை துரைமுருகன் தொடங்கி வைத்த நிலையில் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, வில்சன், திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன், தலைவர் ராஜீவ்காந்தி, மருத்துவரணிச் செயலாளர் நா.எழிலன், தலைவர் கனிமொழி சோமு, மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக எப்படி போராடியதோ அதே போல நீட் தேர்விற்கும் எதிராக போராடும் என்று தெரிவித்ததோடு உதயநிதி ஸ்டாலின் விரைந்து செயல்பட்டு வருகிறார் மேலும் அடுத்த போராட்டத்தை உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போராட்டத்தில் பேசும்போது பாஜக அரசையும் அதிமுக ஆட்சியையும் தாக்கி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது
அதாவது நீட் தேர்வால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு காரணம் பாஜக அரசும் அதனுடன் கைகோர்த்துள்ள அதிமுகவும் தான் என்று விமர்சித்து பேசினார் மேலும் நான் இந்த போராட்டத்தை ஒரு அமைச்சராகவோ அல்லது எம்எல்ஏவாகவோ வந்து பங்கேற்கவில்லை 21 மாணவர்களின் அண்ணனாக வந்திருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் இந்த போராட்டம் ஆரம்பம் தான் இதனைத் தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்த உள்ளதாக கூறிய உதயநிதி நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்றால் பிரதமர் வாசல் முன்பு கூட போராட்டத்தை நடத்துவோம் என்று கூறினார் மேலும் மாடுபிடிக்காக சண்டை போட்ட நாம் மாணவர்களுக்காக போராட்டம் செய்வோம் என்று அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் மேலும் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு என்பது கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் அதில் மாநில அரசால் எந்த முடிவும் எடுக்க முடியாது மேலும் நீட் என்பது நீதிமன்ற உத்தரவு இதனை எதிர்த்து பதவி பிரமாணம் செய்த அமைச்சர் போராடுவது சட்டத்திற்கு புறம்பானது என அரசியல் வல்லுனர்களும் ஆலோசர்களும் கூறிவரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி வரை சென்று இறங்கி போராடுவேன் என உதயநிதி ஸ்டாலின் இறங்கி இருப்பது கண்டிப்பாக அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கும் என அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்
அமைச்சர் பதவி போய்விடும் என்ற விஷயம் தெரியாமலேயே உதயநிதி நீட் விவகாரத்தில் இறங்கி உள்ளார் என்றும் தனக்குத்தானே ஆப்பு வைத்துள்ளார் என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதனை விரைவில் அதிமுக அல்லது பாஜக தரப்பு நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கும் எனவும் அதனால் அமைச்சர் பதவியை இழக்கும் நிலை வரை செல்லலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்க்கு முன்னதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான இன்பதுரை "அரசியலமைப்பு சட்டம் 164 ன்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரமாணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது Breach Of Oath. உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில் உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்." எனத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது..