24 special

நைசாக எஸ்கேப் ஆக பார்த்த திருமாவளவன், உதயநிதி போட்ட போடு!

udhayanithi, thirumalavan
udhayanithi, thirumalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று சுற்றிக் கொண்டிருந்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணி விரிசல் ஏற்பட்ட செய்தி விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் இனிப்பு செய்தியாக அமைந்தது. இதனால் அதிமுக தரப்பில் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த நாளே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் சந்திக்க நேரம் கேட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் திமுக தலைமை தன் கூட்டணியை தன் பக்கமே வைத்துக் கொள்வதற்காக பல அதிரடி சலுகைகளை தன் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கலாம் என்று தனது மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டது.


இப்படி திமுகவும் ஒரு பக்கம் தன் கூட்டணி கட்சியை தன்னிடம் வைத்துக் கொள்ள போராடியும் மறுபக்கம் திமுகவுடன் இனி கூட்டணியில் நிலைத்தால் நாடாளுமன்றத்தில் சீட்டு கிடைத்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு ஏன் என்றால் அந்த அளவிற்கு அதிருப்திகளை மக்கள் மத்தியில் திமுக பெற்று வருகிறது என்பதை நன்கு உணர்ந்து விட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.இந்த சமயத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சி பிடித்தது மட்டுமின்றி இந்த மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் காங்கிரஸின் பிடியில் இருந்து பாஜக பறித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பாஜக தலைவர்கள் கூறியபடியே பெரும்பான்மையாக பாஜக வென்று விட்டதே! என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இனி I.N.D.I கூட்டணியில் இருக்கும் திமுகவின் கூட்டணியில் இருந்து விலகி நைசாக அதிமுகவில் சேர ரகசிய தூது விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு  காரணம் உதயநிதியின் சனாதான பேச்சு தான் என நாடு முழுவதும் கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்கப்பட்டதற்கு  நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஒரு மாநிலத்தின் வெற்றி என்பதை அந்தந்த மாநிலத்தில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்தே மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தேர்தலானது தேசிய பார்வையோடு நடந்த தேர்தல் அல்ல மோடியா ராகுல் காந்தியா என்று அவர்களை முன்னிறுத்தப்பட்ட தேர்தலும் அல்ல! ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் உள்ள பிரச்சனை வேறு ராஜஸ்தானில் உள்ள பிரச்சனை வேறு மேலும் சத்தீஸ்கரில் உள்ள அரசியல் சூழ்நிலைகளும் தெலுங்கானாவில் உள்ள அரசியல் சூழ்நிலையும் வேறு வேறு! அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சி தலைவர்கள் அதிக செல்வாக்கைப் பெற்று மக்களின் வாக்குகளை பெற்றுள்ளனர்.இதனால் சனாதனத்தை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது! சாதனத்தை எதிர்ப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசியதே காங்கிரஸ் தோற்றுதற்கு காரணம் என்று விமர்சிக்கப்படுவது உண்மை அல்ல இந்த விமர்சனம் ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார். 

திருமாவளவனின் இந்த கருத்து குறித்து பின்னணியில் விசாரித்த பொழுது, உதயநிதி சனாதனத்தை எதிர்ப்பதாக பேசிய பொழுது மேடையில் இருந்தது திருமாவளவனும் தான்! மேலும் இந்த சனாதன விவகாரத்தை எடுத்து பேசக்கூடாது என உதயநிதி தரப்பிலிருந்து திருமாவளவனுக்கு செய்தி வேறு அனுப்பப்பட்டதாக சில தகவல்கள் கசிந்தன, அதாவது தேவையில்லாமல் இந்த சனாதன விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவார்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என செய்தி அனுப்பப்பட்டுள்ளதாம்! அதுமட்டுமல்லாமல் கூட்டணி முறிவு குறித்து ஏதேனும் பேச்சு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் உதயநிதி தரப்பில் வேறு கூறப்பட்டுள்ளதால் தான் திருமாவளவன் ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு சனாதன பேச்சு காரணம் இல்லை என்றும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது.