Cinema

பிரபுதேவா மனைவியிடம் அடி வாங்கினாரா நயன்தாரா! என்ன நடந்தது?

nayanthara vignesh, prabu deva
nayanthara vignesh, prabu deva

டயானா மரியம் கொரியன் என்கின்ற தன் பெயரை படத்திற்காக நயன்தாரா என்று மாற்றிக் கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தில் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார். தனது கல்லூரி நாட்களிலில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த நயன்தாரா 2003 மலையாள படத்தில் முதல் முறையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் இவர் முதல் முறையாக அறிமுகமான படம் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தது அந்த காலகட்டத்தில் இருந்த நடிகைகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


அப்படி ஒவ்வொரு படங்களாக நடிக்க ஆரம்பித்து ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு தோற்றத்திலும் வேறு வேறு கதை களத்தையும் தாங்கி நடித்துக் கொண்டு வந்த நயன்தாரா தற்பொழுது பெண்களை முன்னிலைப்படுத்தி பெண்களை சார்ந்த கதைகளை தேர்வு செய்து அதற்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார். நடிப்பில் படி பிசியாக இருந்து வந்த நயன்தாரா திடீரென தனது திருமண செய்தியை அறிவித்து பல வருடமாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து கொண்டார், இவரது திருமணம் செய்தி வெளிவந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் வெளியிட்ட செய்தி பெரும் விமர்சனத்தையும் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில் இக்குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டது என்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல விமர்சனங்களையும் தனது பல கட்டத்தில் சந்தித்து வந்த நயன்தாரா தனது நடிப்பில் அனைவரது மனதையும் கவர்ந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும் பட்டம் போட்டுகொண்டு நடித்து வருகிறார். இருப்பினும் இப்படி கூறுவது தனக்கு பிடிக்கவில்லை இனி அப்படி கூறாதீர்கள் என்றும் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இப்படி சினிமா துறையில் அதிக வருமானம் பெறும் பெண் நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த சில மாதங்களாக பிசினஸில் இறங்கி உள்ளார். முதலில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் இரண்டாவதாக விவசாயிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் அவர்களிடம் நேரடியாக உற்பத்தி செய்து உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்திடம் கைகோர்த்துள்ளார் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து மூன்றாவதாக ஃபெமி நைன் என்கின்ற நாப்கின் தயாரித்து விற்பனை செய்யும் பிசினஸ்யிலும் இறங்கி உள்ளார். இப்படி  தனது இரண்டாவது இன்னிங்ஸாக பிசினஸில் இறங்கி இருக்கும் நயன்தாரா சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி femi 9 நாப்கின்னையும் வழங்கி அதனை விளம்பரமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது விளம்பரத்திற்கு அவர் பயன்படுத்திக் கொண்டது பெரும் விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் தற்பொழுது அதனை தொடர்ந்து மேலும் ஒரு சர்ச்சையை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்த நயன்தாரா அவரை காதலித்து கல்யாணம் வரை சென்று சிம்புவிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டார் பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதற்குப் பிறகும் பிரபுதேவா உடன் காதல் வலையில் விழுந்து பிரபுதேவா மனைவியிடம் அடி வாங்கியது எல்லாம் நயன்தாரா மறந்து விட்டார் போல என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்களை தெரிவித்துள்ளார். இப்படி பயில்வான் ரங்கநாதன் சற்று யோசிக்காமல் நயன்தாரா குறித்து பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.