நடிகர் விஜய் சினிமா துறையில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து அதன் மூலம் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளவர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரையும் வைத்து அதற்காக உறுப்பினர்களையும் சேர்த்து வருகிறார். சமீபத்தில் இந்த வருடத்தில் 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை விரைவில் சந்திக்க போவதாக தமிழக வெற்றி கழகத்தின் இணையதள பக்கத்தில் கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில் பாராட்டு விழாவானது இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும், முதல் கட்டமாக வருகின்ற ஜூன் 28ஆம் தேதி குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பிரித்து சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளதாகவும், இரண்டாவது கட்டமாக மீதம் உள்ள மாவட்டங்களில் குள்ள மாணவர்களுக்கு தொகுதிவாரியாக பிரித்து ஜூலை 7ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தி சமீபத்தில் வெளியாகி மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்தது. ஆனால் இந்த சமயத்தில் விஜய் எதற்காக அரசியலுக்கு வந்தார் அவருடைய நோக்கம் என்ன?? இதுதான் அவருடைய நோக்கம்!! என்று அரசியல் விமர்சனம் ஒருவர் இருக்கக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரவல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூடிருப்பது என்னவென்றால்...விஜய் இதுவரை அரசியல் சார்ந்து எதுவும் பெரிய அளவில் செய்ததே கிடையாது. ஊழலை ஒலிக்கின்றேன் என்று கூறுகிறார். ஆனால் அவருடைய திரைப்படங்கள் எல்லாம் பிளாக்கில் ஓடும் பொழுது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் ஏழை எளியவர்களுக்கானவர் என்று கூறிவிட்டு வருகிறீர்கள். ஆனால் உங்களின் திரைப்படம் ஒரு ஏழையின் ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தின் சம்பளம் கொடுத்துப் பார்க்க வேண்டிய நிலைமையில் ரசிகர்களை நிறுத்துகிறீர்கள். அதேபோல ரசிகர்கள் கஷ்டப்படும் நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறுவது போன்று விஜய் ஒருபோதும் இருந்ததே கிடையாது. எனவே விஜய் நான் ஊழல் அற்றவன் என்று கூறும் தகுதியை இழந்துள்ளார். மேலும் சமூகத்தில் ஜாதி வன்கொடுமைகள் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் கூட அதை எதிர்த்து குரல் கொடுத்தது கிடையாது.
நீட் தேர்வுக்கு மட்டும் குரல் கொடுத்தார் ஆனால் அதுவும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு வர போகிறேன் என்று ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார். ஆனால் அதற்காக அவர் செய்தது எதுவுமே கிடையாது. இதுவரை அவருடைய கொள்கை என்னவென்று அவர் கூறியதை கிடையாது. முழுவதுமாக முடித்துவிட்டு கொள்கையை சொல்வது சரியானது கிடையாது என்றும் அது உண்மையாக இருக்கப் போவது கிடையாது என கூறியுள்ளார். இத்தனை நாட்களாக சினிமா வாழ்க்கையில் ஆபத்தை பார்த்துவிட்டு தற்போது அரசியல் வாழ்க்கையில் லாபத்தை பார்க்க வேண்டும் என்று சரியாக பிளான் செய்து வந்திருப்பதால் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரின் திரைப்படங்களில் கூட கமர்சியல் சிஸ்டமாக தான் இருந்துள்ளதே தவிர, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் அறம் சார்ந்த விஷயம் குறித்து இதுவரை நடித்தது கிடையாது. குடிக்கிறது, புகை பிடிப்பது போன்ற திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்று அந்த வீடியோவில் அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது அரசியல் ரீதியாக விமர்னசங்களை பெற்று வருகிறது...