24 special

மேயர் பிரியா அடித்த புட் ஃபோர்டு பயணத்தால் நேர்ந்த சங்கடம்..! இப்ப என்ன செய்வது?

Mayor priya
Mayor priya

தமிழகத்தில் ஊடக கவனம் பெற்ற இளம் அரசியல்வாதிகளில் ஒருவராக திமுகவை சேர்ந்த பெண் மேயர் பிரியா இருந்து வருகிறார் அவரது செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது அவரின் பேட்டிகள் மற்றும் மூத்த திமுக அமைச்சர்கள் மேயர் பிரியாவை விமர்சனம் செய்வதன் மூலமாகவோ எப்படியோ டைம் லைனில் இருந்து வருபவர் மேயர் பிரியா.


என்னதான் ஊடக கவனத்தை பிரியா பெற்றாலும் அவரது செயல்பாடுகள் கட்சிக்கு சில நேரங்களில் சங்கடத்தை உண்டாக்கி விடுகின்றன அந்த வகையில் மேயர் பிரியா முதல்வர் கான்வாயில் காரில் தொங்கி கொண்டு சென்றது பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை திமுகவை சேர்ந்த பெண் மேயர் முதல்வர் கான்வாயில் தொங்கி கொண்டு செல்லும் நிலை தமிழகத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன.

இந்த நிலையில் மேயர் பிரியாவிடம் ஏன் முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது, அதற்கு மேயர் தரப்பிலோ..,"

முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய காசிமேடு துறைமுகம் வந்தார். அவர் வருவதற்கு முன்பாக மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் காசிமேடு துறைமுகம் சென்று விட்டனர்.

மேயரின் வாகனம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் கார் துறைமுகத்திற்கு உள்ளே வர தொடங்கியதை தெரிந்துகொண்டு இவர்கள் நடக்கத் தொடங்கினர். இதற்கிடையில் முதல்வர் வாகனம் வேகமாக செல்லத் தொடங்கியது.

இதை பார்த்த உடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் முதல்வரின் கான்வாயில் ஏறி தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்" முதல்வருக்கு முன்பாக இடத்தில் இருக்க வேண்டும் முதல்வர் காத்திருக்கும் சூழல் உண்டாக கூடாது என்பதால் காரில் தொங்கியபடி சென்றதாக கூறி இருக்கிறார்கள்.

மேயர் பிரியா தரப்பில் விளக்கம் கொடுத்தாலும் இப்போது மிக பெரிய விமர்சனங்கள் திமுகவின் மீது எழுந்து இருக்கிறது., பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண் மேயர் ஒருவரை தங்கள் எடுப்பு போல திமுக அமைச்சர்கள் பல மேடைகளில் ஒருமையில் பேசினர், இப்போது காரில் தொங்கி கொண்டு செல்லும் சூழல் இவற்றை எல்லாம் முதல்வர் கவனிக்க மாட்டாரா என்று விமர்சனங்கள் ஏழ தொடங்கி இருக்கின்றன.

ஏற்கனவே முறையான திட்டமிடல் இல்லாமல் செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என மேயர் பிரியாவிற்கு தலைமை அறிவுறுத்திய நிலையில் இப்போது,  காரில் தொங்கி கொண்டு செல்வது குறிப்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் உண்டாவது போன்ற செயல்களை முழுமையாக தவிர்த்து முழுக்க முழுக்க மழை காலத்தை எதிர்கொள்வது குறித்து முழுமையாக கவனம் செலுத்த பிரியாவிற்கு அறிவுரை வழக்கப்பட்டு இருக்கிறதாம்.

இது ஒருபுறம் இருக்க இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் மேயரை முதல்வர் கான்வாயில் தொங்கி கொண்டு செல்லும் சூழலை பார்த்து இருந்தால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் வரை சமூக ஆர்வலர்கள், பெண்ணியல் ஆதரவாளர்கள் தொடங்கி பட்டியல் சமுதாய அரசியல் கட்சிகள் வரை வீதிக்கு வந்து தமிழகத்தில் போராட்டமே நடத்தி இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தின் தலைநகரில் மேயர் பிரியாவிற்கு உண்டான நிலையை குறைந்த பட்சம் கண்டிக்கும் செயலை கூட சமுக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் செய்யாது இருப்பதே பலரது உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக அமைந்து இருப்பதாக கருத்துக்கள் பெரும் அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.