24 special

முதல்வரிடம் முக்கிய விஷயத்தை சொன்ன மோடி..! அடுத்த நொடியே "OK" சொன்ன சுவாரசியம்..!

Modi stalin
Modi stalin

உலக நாடுகளின் தலைவன் என பெருமையாக சொல்லும் அளவிற்கு G20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்று இருக்கிறது, பிரதமர் மோடியிடம் அந்த பொறுப்பு வந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் உள்ள  நாடாளுமன்றத்தில் உறுப்பினருள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒருவர் என்ற ரீதியில் அழைப்பு விடுக்க பட்டது.


இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் பிரதமர் மோடியே நேரடியாக சென்று நலம் விசாரித்தார், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர் பாலு போன்றோர் திமுக சார்பில் கலந்து கொண்டனர்.

முதல்வருக்கு நேரடியாக மொழி மாற்றம் உள்ளிட்ட உதவிகளை செய்யும் பொருட்டு டி. ஆர் பாலுவை முதல்வர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் டெல்லியில் இறங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது, முதல்வரை சந்தித்த பிரதமர் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்த பின்பு, பயணம் எப்படி இருக்கிறது என கேட்டு இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் மிகவும் நன்றாக இருக்கிறது என கூற வீட்டில் குடும்பத்தினர் நலமா அம்மாவை விசாரித்ததாக கூறுங்கள் என கூற பதிலுக்கு பிரதமர் தயாரையும் முதல்வர் நலம் விசாரித்து இருக்கிறார் இதன் பிறகு உண்மையில் தமிழகத்தில் பிரதமருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பையும், டெல்லிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பையும் தமிழக இல்லத்தில் பணியாற்றும் நபர்கள் மிகவும் பெருமை பட்டு இருக்கிறார்கள்.

அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் விருந்தினர் என்று தனது இடத்திற்கு வருபவர்களுக்கு உரிய முக்கியதுவம் கொடுப்பதை இனியாவது திமுகவினர் தெரிந்து கொள்ளவேண்டும் goback என போடுவதால் எந்த பயனும் இல்லை என முனுமுனுத்து இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால் பிரதமர் மோடி இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைத்தது வெறும் விருந்து உபசரிப்பிற்கு இல்லை என்பதை தெளிவாக அனைவரிடமும் குறிப்பிட்டு இருக்கிறாராம். உலகில் மிக பெரிய பொறுப்பு இந்தியர்களை தேடி வந்து இருக்கிறது, உலக தலைவர்கள் அனைவரும் இந்தியாவில் கூடும் போது உலகின் கவனம் இந்தியாவின் மீது இருக்கும்.

போராட்டம் ஆர்ப்பாட்டம் என ஏதாவது ஒன்று நடந்து வருகின்ற விருந்தினர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அது இந்தியாவின் மீதான கரும்புள்ளியாக மாறிவிடும் முழுக்க முழுக்க இதில் அரசியல் இருக்க கூடாது, நமது எதிரி நாடுகள் இதை சந்தர்ப்பமாக எடுக்க வாய்ப்பு இருக்கிறது என  உலக அரசியல் ரீதியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதை அனைவரும் ஒரு மனதாக ஏற்று கொண்டு இருக்கிறார்களாம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியதுடன், G20 மாநாடு சிறப்புடன் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

எங்கெல்லாம் எதிர்ப்புகள் எழும் என மத்திய உள்துறை கணித்து சரியாக அந்த மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர் போன்றோரிடம் முழுமையான தகவலை கொண்டு சேர்க்க போகிறதாம் மத்தய அரசு என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

பிரதமர் மோடி தமிழகத்தில் இராணுவ உற்பத்தி மையத்தை திறந்து வைக்க வருகை தந்த போது திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர் ஆனால் பிரதமரோ நாட்டிற்கு ஒரு தேவை எனும் போது அரசியல் சித்தாந்ததில் எதிர் தரப்பாக இருக்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்து மகிழ்ந்து இருக்கிறார் பிரதமர்.இனியாவது அரசியல் வேறு வளர்ச்சி திட்டங்கள் வேறு என்பதை புரிந்து கொண்டு மனம் மாறுமா திமுக என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.