Politics

கோவைக்கு இரண்டு இன்னோவா கார் கொடுக்க வேண்டும் இணையத்தில் வைரலாகும் உல்டா காரணம் !!

கோவைக்கு இரண்டு இன்னோவா கார் கொடுக்க வேண்டும் இணையத்தில் வைரலாகும் உல்டா காரணம் !!
கோவைக்கு இரண்டு இன்னோவா கார் கொடுக்க வேண்டும் இணையத்தில் வைரலாகும் உல்டா காரணம் !!

தமிழக பாஜக தலைவர் முருகன் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட. தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக கொடுக்கப்படும் என தெரிவித்தார் அதன் அடிப்படையில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசாக அளிக்கப்படுகிறது.


இந்நிலையில் சிலருக்கு ஒரு கார் பரிசளிக்க கூடாது எனவும் இரண்டு கார்கள் பரிசளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் இணையத்தில் பரவி வருகிறது.அதில் சில :-கோவை மாவட்டத்திற்கு இன்னோவா கார் ஒன்று பத்தாது. சிபிஆர் ஐ தோற்கடித்ததற்கு சேர்த்து இரண்டு கொடுக்க வேண்டும்.வானதி அவர்களும் மற்ற மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று சொன்னாள் அவர்களுடைய தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் அவர்களுடைய ஐந்தாண்டு களப்பணியே காரணம்.


கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நிச்சயமாக இல்லை. வானதி தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் செயலாற்றியவர் கலெக்சன் எங்கு கிடைக்குமோ அங்கே பணியாற்றினார்கள்.சங்கம் கடைசியில் களம் இறங்க கோவை மாவட்டத்தை சுற்றி இருக்கின்ற கடைக்கோடி நல்லூர் வயல் பகுதியில் இருந்தும்கூட தொண்டர்கள் 66 பூத்களாக பொறுப்பெடுத்து வீடு வீடாகச் சென்று பணியாற்றியது.

பொள்ளாச்சியில் இருந்து வந்தவர்களும் கிணத்துக்கடவில் இருந்து வந்தவர்களும் பல கிராமங்களில் இருந்து வந்தவர்கள் உடைய உழைப்பு தான் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.அதைவிட கெம்பட்டி காலனி, அசோக் நகர், செட்டி வீதி, செல்வபுரம் கிழக்கு பகுதியில் பல காலங்களாக தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழுகின்ற பகுதியாய் இருந்ததால் இந்துக்களுடைய உணர்வு அங்கே கள பணியாற்றியது. அதன் காரணமாகவே கடைசி கட்டத்தில் வானதி வெற்றியை பெற முடிந்தது என்பதுதான் உண்மை.

இதில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் ஆற்றிய பணி ஒன்றும் இல்லை. இன்னோவா கார் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் தாராபுரத்தில் வெற்றிக்கு மிக அருகாமையில் வந்து வெறும் ஆயிரத்து முன்னூற்று சில்லறை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த அங்கு பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுத்தால் நியாயமானதாக இருக்கும்.இன்னும் பல சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகளுக்கு பரிசு அளித்தால் அடுத்த முறை வெற்றி என்பது நிச்சயம்.

கோவை மாநகருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு பரிசு கொடுக்க வேண்டும் ஒன்று வானதி சீனிவாசன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பணியாற்றியது. இன்னொன்று சிபிஆர் தோற்கடிக்க பணியாற்றியது.  ஆக இரு பரிசுகள் பெறுகின்ற தகுதி மாவட்டத்துக்கு உண்டு. தயவுசெய்து மாநில நிர்வாக தலைவர் முருகன் அவர்களை நாங்கள் கேட்டுக் கொள்வது இன்னும் நிறைய கட்சி பணி செய்வதற்கு கோவை மாவட்ட தலைவர்களுக்கு இரண்டு கார்கள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.