சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவரான செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும், பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யனும் காதலிப்பதாக தெரிகிறது.நடிகை ஷபானாவின் ரிலேஷன்ஷிப் குறித்து நிறைய வதந்திகள் வந்துள்ளன. சமீபத்தில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் புகழ், நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இப்போது அதில் சிறிது வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன். “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” எனக் கேட்டிருந்தார்.
இதனை தன் பக்கத்தில் பகிர்ந்த ஷபானா, ‘மைன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.இதன் மூலம் ஷபானாவும் ஆர்யாவும் காதலில் இருப்பதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
வெள்ளித்திரை ஹீரோ ஹீரோயினிக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகை நடிகர்கள் பிரபலமடைவதும், அவர்களை பற்றிய காதல் செய்திகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிப்பதும் தொடர்கதையாக மாறிவருகிறது.