உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷால் இருவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தற்போது உதயநிதி மற்றும் விஷால் இடையே மெல்ல மெல்ல நட்பு உடைந்து ஒரு வித ஈகோ யுத்தம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி விவாகரத்தை ஒப்பிட்டு விஷால் மற்றும் உதயநிதி இடையே உள்ளூர மோதல் தொடங்கி இருப்பதாக கூறுகின்றன கோடம்பாக்க வட்டாரங்கள்... கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார்.
அப்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டார்.
அதைப் பகிர்ந்த பிரதமர் மோடி ‘காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி’ என பதிலளித்தார்.இது பற்றி விஷால் கூறியதாவது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்று செய்தியாளார்கள் கேள்விக்கி விளக்கம் கொடுத்தார்.
அதே போன்று தனியார் ஊடகம் ஒன்றில் சிறப்பாக செயல்படும் மாநில அரசு என்றால் எந்த அரசை குறிப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு சட்டென பாஜக அரசு என தெரிவித்தார் விஷால் அப்போதே விசால் தமிழக அரசை ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுந்தது.இந்த சூழலில் தான் விஷால் உதயநிதி இடையே லத்தி திரைப்படத்தின் விநியோக விஷயத்தில் இருந்தே ஒத்து போகவில்லை என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரங்கள்.. விசால் உதயநிதியிடம் கேட்டு கொண்டதற்காக ரெட் ஜெயிண்ட் லத்தி திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்தது.
படம் எதிர் பார்த்த வெற்றியை தராத காரணத்திற்காக லத்தி திரைப்படத்தின் சாட்டி லைட் உரிமை தொகையில் உதயநிதி தரப்பு குறைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தை முன்வைத்து விசால், உதயநிதி இடையே மெல்ல உரசல் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை பாராட்டி வரும் விசாலை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்.
விசாலின் நடிப்பில் உருவாகிவரும் மார்க் ஆண்டணி படத்தை வெளியிட கூடாது என உறுக்கமான கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்களாம் சினிமா வட்டாரத்தில் உள்ள உடன் பிறப்புகள் மொத்தத்தில் மார்க் ஆண்டணி திரைப்படத்தை பிரதமர் மோடியை பற்றிய ட்விட்டர் பதிவுடன் ஒப்பிட்டு குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறதாம் ஒரு தரப்பு என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.