Tamilnadu

யோகி மீது இப்படி ஒரு பயமா? அனைத்தையும் டெலீட் செய்துவிட்டு ஓட்டம் எடுத்த குணா அண்ட் டீம்

Yogi and gunasekaran
Yogi and gunasekaran

தமிழக ஊடகங்கள் சில தங்கள் அரசியல் லாபத்திற்காக மத மோதல்களை உண்டாக்கும் போலி செய்திகளை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் பரப்பி வருகின்றனர் அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெய் ஸ்ரீராம் என்று கூறும்படி பாஜக ஆளும் மாநிலமான உபியில் இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி பரவியது.


சன் நியூஸ், பிபிசி தமிழ், கலைஞர் டிவி போன்றவை இந்த போலி செய்தியை எந்தவித சோதனையும் செய்யாமல் பரப்பின பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாக கூடவே மக்களுக்கு பயத்தை உண்டாக்கும் வண்ணம் செய்தியை பகிர்ந்தனர்.

இந்த சூழலில் உபி காவல்துறை நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி FIR பதிவு செய்தது, விசாரணையின் முடிவில் இது மத மோதல் இல்லை எனவும்  தாயத்து காரணமாக தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்குதல் சம்பவம் நடைபெற்றதும், இஸ்லாமிய நபரை தாக்கியத்தில் மூன்று இஸ்லாமிய நபர்கள் இருந்ததும் கண்டறியபட்டது, இதன் மூலம் நடைபெற்றது மத மோதல் இல்லை என்பது தெளிவானது.

இதையடுத்து போலி செய்தி பரப்பிய ஊடகங்கள், அதற்கு துணை போன பத்திரிகையாளர்கள், போலி செய்தி பரவ இடமளித்த ட்விட்டர் நிறுவனங்கள் மீது உபி போலீஸ் வழக்கு பதிவு செய்தது, மேலும் போலி செய்தியை பகிர்ந்தவர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கவும் உபி காவல்துறை வலியுறுத்தியது, இந்த செய்தி வெளியான மறு நிமிடமே தாங்கள் வெளியிட்ட போலி செய்தியை நீக்கியது சன் நியூஸ்.

அதுமட்டுமல்லாமல் அந்த செய்தி பரவ காரணமான அனைத்து இணைப்புகளையும் நீக்கிவிட்டது சன் நியூஸ் ஊடகத்தின் தலைமை பொறுப்பில் குண சேகரன் இருப்பது குறிப்பிடத்தக்கது, குணசேகரன் குழுவினர் இதே போன்று பல போலி செய்திகளை பகிர்ந்த காரணத்திற்காக இதற்கு முன்னர் பிரபல ஊடகம் ஒன்றில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

யோகி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்ற காரணத்திற்காக தாங்கள் வெளியிட்ட போலி செய்தியை குணா குழுவினர் நீக்கிவிட்டு ஓட்டம் எடுத்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்து வருகிறது.