Tamilnadu

பாதுகாப்புதான் முக்கியம் பைலை மேஜை மேல் தூக்கி போட்ட பிரதமர் வெளியில் வந்து அச்சுமாறாமல் பேசிய ஸ்டாலின் !

Tamilnadu cm and nation pm
Tamilnadu cm and nation pm

தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் மறபுகளின் அடிப்படையில் பிரதமரை சந்திக்க நேரம் கோரியிருந்தார், தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரை அவரது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசிய போது பிரதமர் அலுவலகம் விரைவில் நேரம் ஒதுக்க உள்ளதாகவும், பிரதமரை சந்திக்க வருபவர்கள் அனைவரும் கோவிட் பரிசோதனை செய்துகொண்டு அந்த விபரத்தை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


இதையடுத்து திமுக மூத்த அமைச்சர்கள் முதல் தலைவர்கள் வரை ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் மேலும் தனது தனி செயலாளர்கள் மூலம், தேவைப்படும் நிதி ஆதாரம், நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட பல தகவல்களை திரட்டவும் அதை ஆங்கிலத்தில் தயார் செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து 200 பக்கங்கள் தயார் செய்யபட்டது அதில் உள்ள சில வற்றை நீக்கி 170+ பக்கங்களை இறுதி செய்து முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது, அதை எடுத்து கொண்டு டெல்லி கிளம்பி சென்றார் ஸ்டாலின், ஸ்டாலினை வரவேற்க பிரதமர் தனி கவனம் கொடுத்து புல்லட் ப்ரூப் காரை அனுப்பி வைக்க இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால் அந்த தகவல் போலி என நேற்று நிரூபணம் ஆனது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அது போன்று எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை என உறுதிப்படுத்தும் விதமாக கார் அனுப்பி வைக்கப்படவில்லை, இவை தவிர 2016-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்பு பிரதமரை சந்திக்க சென்றார்.

அவரை நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர், அது போன்ற தற்போது டெல்லி சென்றுள்ள ஸ்டாலினை வரவேற்க யாரும் செல்லவில்லை, திமுகவினர் மட்டுமே வரவேற்றனர் இந்த சூழலில் பிரதமரை சந்திக்க சென்ற ஸ்டாலினை இன் முகத்துடன் வரவேற்றார் பிரதமர் மோடி.

வரவேற்று இருக்கையில் அமர செய்துவிட்டு கோரிக்கை மனுவை வாங்கினார் அப்போது நாற்காலியில் முழுமையாக உட்காராமல் பாதியில் அமர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.. ஏன் நன்றாக உட்காருங்கள் என சொல்ல கடைசிவரை ஸ்டாலின் கேட்கவில்லை இதையடுத்து தலைகாணியை பின்னால் வைத்து கொள்ளுங்கள் என கூறியதும் அதை மட்டும் ஏற்று கொண்டார்.

பின்பு நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன, விரைவில் தமிழகம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் ஸ்டாலின், சரியான நேரம் அமையும் போது நிச்சயம் வருகிறேன் என உறுதி அளித்தார் பிரதமர், மேலும் தமிழகத்தின் நிதி நிலையை எடுத்து கூறி நிலுவையில் உள்ள GST தொகையை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், முதல்வர் ஸ்டாலினிடம் சில தகவல்களை சுட்டி காட்டினார், தமிழகம் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த மாநிலம் ஆனால் தற்போது அது பாதுகாப்பற்ற பகுதியாக மாறுவருகிறது, குறிப்பாக மதுரையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாத இயக்குத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது முதல் சென்னையில் தொடங்கப்பட்ட NIA கிளை வரை என்ன காரணம் என தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் முழுமையான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார், இவை அனைத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார், பிரதமரிடம் CAA குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  யார் ஆட்சிக்கு வருகிறார்கள் செல்கிறார்கள் என்பது முக்கியமில்லை நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு அனைவரும் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் அலுவலக செயலாளர் அமுதா மூலம் 4 கோப்புகளையும் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் பல்வேறு தகவல்கள் இருக்கிறதாம்,இதையடுத்து சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியில் வந்த ஸ்டாலின் உறவுக்கு கைக்கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என தெரிவித்துவிட்டு சூசகமாக மத்திய அரசுடன் விரோத போக்கை கடைபிடிக்க போவதில்லை என தெரியப்படுத்திவிட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.