
தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை கிளம்பியிருக்கும் சம்பவம் வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தான் இதில் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் வெளியாகி சூட்டை கிளப்பியுள்ளது. குறிப்பாக வக்பு வாரியங்களிடம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளது. வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்பு வாரியத்துக்கு சொந்தம் என பிரச்சனை எழுந்தது 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயிலும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கிராம மக்கள் தலையில் இடியை இறக்கினார்கள். கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் நாட்டின் அதிமுக்கிய சட்டதிருத்தங்களில் ஒன்றும், அவசியம் செய்தாக வேண்டிய விஷயமுமான வக்ப் வாரிய சட்டதிருத்த மசோதா. இரு அவைகளிலும் வெற்றிகரமாக சட்டமாக்கபட்டது.மக்களவையில் இது எளிதாக வென்றது ஆனால் ராஜ்ய சபாவில் நிறைவேறுமா என கேள்விகள் எழுந்தது ராஜ்யசபாவில் 125 வாக்குகளுடன் சட்டம் நிறைவேற்றபட்டது
இதற்கு முன், சன்னி வக்ப் வாரியத்தில் சன்னி முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். ஷியா வாரியத்தில் ஷியா முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும்.அவை எல்லாம், இந்த மசோதாவில் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாகவும், முழுக்க முழுக்க மதச்சார்பின்மையுடன் கூடிய அமைப்பாகவும், வக்ப் வாரியம் இனி இருக்கப் போகிறது புதிய சட்டத்தின்படி, சன்னி, ஷியா, போரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லிம் அல்லாத முக்கியஸ்தர்கள் என பலரும், வக்ப் வாரியத்தில் இடம் பெறுவர். வாரியத்தின் குழுவில், குறைந்தபட்சம் முஸ்லிம் அல்லாத நான்கு பேர், இரண்டு பெண்கள் கட்டாயம் இடம் பெறுவர். சமூக நீதி பேசும் திராவிட கட்சிகளுக்கும் நடுநிலை வாதிகளுக்கும் பெண்ணியம் பேசுபவர்கள் யாரும் இதை பற்றி பேசவில்லை.
தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை பெருமையாக பேசும் ஒவ்வொருவரும் வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் இஸ்லாமியர்களுக்கு துரோகம் என மட்டும் பொய்யை பரப்பி அரசியல் செய்து வருகிறார்கள்.அனால் இஸ்லாமியர்களோ இதை கொண்டாடி வருகிறார்கள்.முத்தலாக்,காஷ்மீர் 370 நீக்கம், தற்போது வக்பு சட்ட மசோதா மூன்றுமே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட முத்தான சட்டங்கள் ஆகும். முத்தலாக் என்பது பெண்களின் விடுதலை, காஷ்மீர் தற்போது சுற்றுலா தலமாக மாறி இஸ்லாமியர்கள் தங்களின் வருமானத்தை பெருக்கிவருகிறார்கள் . இதேபோல் வக்பு சட்டம் அனைத்து இஸ்லாமிய சாதிகளையும் ஒருங்கினைக்கிறது.
மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஸ்குமார் வக்ப்போர்டு திருத்தசட்டம் வக்ப் போர்டு திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்து மோடி அரசின் தளபதிகளாக செயல்பட்டு இருக்கிறார்கள்.மோடியின் 3 வது அரசு 6 மாதம் கூட தாங்காது சந்திர பாபு நாயுடுவும் நிதிஸ்குமாரும் காங்கிரஸ் உடன் கை கோர்த்து மோடி ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள் என்று எதிர்கட்சிகள் உளறி வந்த நிலையில் அவர்களை வைத்தே வக்ப்போர்டு திருத்த சட்டத்தை கொண்டு வந்த மோடி அரசின் துணிச்சல் அபாரமானது. மோடியின் கடந்த 2 ஆட்சிகளைவிட இந்த ஆட்சி தான் வலிமையாக இருக்கிறது. இனி பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடுவார்கள்