விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வைத்த கோரிக்கையை நிரகாரித்துள்ளார் ஸ்டாலின், இந்தியா முழுமைக்கும் இந்த ஆண்டு CBSC 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்ய படுவதாகவும், கரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலனை காக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்.
பிரதமர் அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தமிழகத்தில் உள்ள திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பொது தேர்வு ரத்து என்பது நுழைவு தேர்வை திணிக்க கொண்டுவந்த நடவடிக்கை, உடனடியாக பிரதமர் அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர்.
ஒரு படி மேலே சென்று திருமாவளவன், CBSE, ICSE பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.#தமிழகத்திலும்_அதனைப்_பின்பற்ற_வேண்டாம். அனத்துப் பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டாம். என ஸ்டாலினை டேக் செய்து வலியுறுத்தி இருந்தார்.
மேலும் நெருக்கடியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது கடினமானதுதான். ஆனால், 12ஆம்வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆகவேண்டும். அது இன்றிமையாததாகும். மருத்துவம்,பொறியியல்,சட்டம் போன்ற தொழிற்கல்வி யாவற்றுக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையாகும். #நுழைவுத்தேர்வு_கூடாது. எனவும் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் திருமாவளவன் வைத்த கோரிக்கையை புறம் தள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின், கூட்டணி கட்சிகள் என்ற காரணத்திற்காக திருமாவளவன் சொல்லும் அனைத்தையும் கேட்க முடியாது, தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கு திருமவளவனா பொறுப்பு ஏற்பார்?
தமிழக முதல்வர் என்ற அடிப்படையில் ஸ்டாலின் தலையில் தான் இந்த சம்பவம் விழும் எனவே பொது தேர்வை ரத்து செய்தது 100% சரி என திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர், புதிதாக திமுக அரசு அமைந்தவுடன் தங்களது ஆட்சி அமைந்தது போன்று பட்டாசு வெடித்த விசிக நிர்வாகிகள் முகத்தில் பொது தேர்வு ரத்து அறிவிப்பு மூலம் கரியை பூசியுள்ளது புதிய அரசாங்கம்.
கூட்டணி எல்லாம் தேர்தலுக்கு மட்டும்தான் அரசாங்கம் எடுக்கும் முடிவில் தலையிட கூடாது என்று திருமாவளவனுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார் ஸ்டாலின்.