தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது அக்கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க அவரை தொடர்ந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்று கொண்டது.
இந்த அமைச்சரவையில் பழைய புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது, இந்த சூழலில் தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார் பழனிவேல் தியாகராஜன், இவர் பொறுப்பேற்ற மறுநாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் இவரது பேச்சின் மூலம் உருவானது, ஈஷா நிறுவனர் சத்குருவுடன் மோதல் போக்கை கடைபிடித்த பழனிவேல் தியாகராஜன் அவரை ஒருமையில் விமர்சனம் செய்தார்.
இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது, சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களே கண்டிக்க சில நாட்களில் அறிக்கை வெளியிட்டு இனி சத்குரு குறித்து பேசவில்லை எனவும், எனது பொறுப்பை பார்க்க இருப்பதாகவும் தெரிவித்தார் பழனிவேல், அதன் பிறகு GST கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகராஜன் தமிழகத்தின் கோரிக்கையை முன்வைக்காமல் மோதல் போக்கை கடைபிடித்தார்.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் பேச்சிற்கு கோவா நிதி அமைச்சர் பதிலடி கொடுக்க விவகாரம் வேறு கட்டத்திற்கு சென்றது, இதையடுத்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் தமிழக எம்எல்ஏ வுமான வானதி சீனிவாசன் பழனிவேலை நோக்கி கேள்வி எழுப்ப அவர் வானதியை ட்விட்டரில் பிளாக் செய்தார்.
மேலும் கடந்த காலங்களில் ஊடகங்களில் பழனிவேல் தியாகராஜன் பேசிய வார்த்தைகள் கடும் எரிச்சலை மக்கள் மத்தியில் உண்டாக்குவதாக உள்ளது என மூத்த அமைச்சர்கள் குறைக்கூற உடனடியாக பழனிவேல் தியாகராஜனை அழைத்து கண்டித்துள்ளார் ஸ்டாலின், கொடுக்கப்பட்ட பொறுப்பை முதலில் கவனியுங்கள் வேறு விஷயங்களை பேச கட்சியில் செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் மீது மதிப்பு கொண்டு மருமகன் கூறிய ஒரே காரணத்திற்காக பொறுப்பை ஒப்படைத்தேன், அதற்கு நீங்கள் கொடுக்க கூடிய பரிசா இது என கேள்வி கேட்டதுடன், இனி தேவையற்ற விஷயத்தில் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார்.
இந்த தகவல் மேலோட்டமாக தமிழக பாரம்பரிய பத்திரிகை ஒன்றில் வர தற்போது ஊருக்கே விஷயம் தெரிந்துவிட்டது, நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும் என்பது இப்போது சரியாகிவிட்டதே என பலர் பழனிவேல் தியாகராஜனை விமர்சனம் செய்து வருகின்றனர், தனது ஆவேசமான பொறுப்பற்ற பேச்சுக்கள் மூலம் ஒரே மாதத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார் பழனிவேல்.