சிறுத்தையிடம் தனியாகப் போராடி தனது 6 வயது மகனை, தாய் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ளது சித்தி என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு மிக அருகாமையில் அமைந்து இருக்கக்கூடிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு குடும்பம் தான் கிரணுடைய குடும்பம். கிரண் பாய்கா என்ற பெயர் கொண்ட இவர் கடந்த ஞாயிறன்று, வேலையிலிருந்து திரும்பும் தனது கணவருக்காக தன்னுடைய 3 பிள்ளைகள் மற்றும் 4 ஆவதாக கைக்குழந்தையுடன் வீட்டின் வெளியே காத்திருந்து உள்ளார்.
அப்போது அவருக்கு அருகே மறைந்து இருந்த சிறுத்தை அங்கிருந்த குழந்தையை தாக்க பதம்பார்த்து வந்துள்ளது. ராகுல் என்ற ஆறு வயது மகன் தன் தாய்க்கு அருகிலேயே அமர்ந்து இருந்திருக்கிறான். அப்போது திடீரென ராகுலை கவ்விக் கொண்டு சிறுத்தை ஓடியுள்ளது. பின்னர் கையில் வைத்திருந்த தன் குழந்தையை மற்ற குழந்தைகளிடம் கொடுத்து விட்டு ஓடோடி சென்று சிறுத்தையை துரத்தி உள்ளார் கிரண்.
அப்போது ஒரு புதருக்குள் நின்றுகொண்டு உடலை மிதித்தவாறு சிறுத்தை இருந்திருக்கிறது. இக்காட்சியை பார்த்து பதறிப்போன தாய் சிறுத்தையுடன் போராடி தன்னுடைய முழு சக்தியையும் வெளிப்படுத்தி சிறுத்தையிடம் போராடி அதிர்ஷ்டவசமாக ராகுலை மீட்டு உள்ளார். ராகுலை பாத்திரமாக மீட்டு சற்று தூரம் ஓடி வரும் போது, மீண்டும் சிறுத்தை தாக்க வந்துள்ளது. அப்போது பெரும் சக்தியாய் சிறுத்தையை தாக்கி சப்தமிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க செய்துள்ளனர்.
இதை கேட்பதற்கு படபடப்பாக இருந்தாலும், நிலைமையை நாம் சிந்தித்து பார்க்கும் போது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போன்று இருக்கின்றது. அதற்கெல்லாம் காரணம் நான்கு குழந்தைகையும் வைத்துக்கொண்டு ஒரு தாய் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பாங்க. இப்படி ஒரு நிலைமையில் தன்னுடைய குழந்தையை மீட்க முழு பலத்தையும் ஒரு பெண் வெளிப்படுத்தி, அதுவும் சிறுத்தையிடம் சண்டையிடும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு சக்தி இருக்கிறது என்றால் அது ஒரு தாயால்தான் முடியும் என்பதை உணர்த்துகிறது என்கின்றனர் பலரும்.