தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை கான 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்று உத்தரவு போட்ட நிலையில் இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான வேல. ராமமூர்த்தி. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
காவல்துறை சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியை பார்வையிட வேண்டும் வெளியூரில் இருந்து வருகைதரும் உறவினர்களை கூட அனுமதிக்கக் கூடாது அப்படி அனுமதித்தால் கொரோனா தொற்று பரவலுக்கு சட்டத்தை மீறி செயல்பட்டதாக நடவடிக்கை பாயும் என தமிழக அரசு சார்பில் அங்குள்ள மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதே துண்டு பிரசுரம் வேல ராமமூர்த்திக்கும் கொடுக்கப்பட்டது இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பெற்றுக்கொண்ட திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராமமூர்த்தி , இந்த ஆண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது எனவும், போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ளவே இயலாத ஒன்று
ஏன் என்றால் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளத்தின் ஒன்றாக உள்ளது என்றார்.பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு பதிலாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியையே தடை செய்தே இருக்கலாம் , வெறும் 150 பார்வையாளர்கள் என தெரிவித்துள்ளார்கள்.
அதில் எந்த 150 பேரை ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப் போகிறார்கள் சொல்லுங்கள் மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆட்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக் கொள்வார்களா அப்படி இருந்தால் நன்றாக இருக்குமா?என கேள்வி எழுப்பிய வேல ராமமூர்த்தி, எனவே தமிழக அரசு தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி நடத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தி விடுங்கள் என கொந்தளித்துள்ளார்.
இது ஒருபுறம் என்றால் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த முற்படுவதே இத்தனை எதிர்ப்புகளை சந்தித்த சூழலில் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டே தடை செய்யப்பட்டதே அப்போது அப்பகுதி மக்கள் மனநிலை என்னவாக இருந்து இருக்கும்.. இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஒரே நாளில் ஜல்லிக்கட்டிற்கு சிறப்பு சட்டத்தை அனுமதி வழங்கி தமிழர்கள் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிவகை செய்த பாஜகவின் செயல்பாடு இப்போது புரிகிறதா என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க தடை, தை திருநாளில் கோவில்கள் அடைப்பு ஆனால் டாஸ்மாக் மட்டும் இருக்கலாம் எந்த கட்டுப்பாடும் இல்லை இதெல்லாம் எந்த வகையில் நியாயம் எனவும் கொந்தளிக்கின்றனர் மதுரை மக்கள்.