24 special

முதல்வர் ஸ்டாலின் பேச்சையே மதிக்கவில்லையாம்.. அவர் உடன்பிறப்புகள்!

stalin
stalin

முதல்ல ஸ்டாலின் கூறியதையும் மீறி 'அவர் என்ன சொல்றது நம்ம என்ன கேட்கிறது' என்கிற ரீதியில் திமுகவினர் நாளை முதல்வரின் பிறந்தநாளை கொண்டாட தயாராக உள்ளனர். நாளை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எழுபதாவது பிறந்த நாள் இதனை முன்னிட்டு திமுக தரப்பில் ஏகபோக கொண்டாட்டங்கள் நடைபெற இருக்கிறது, இதனை முன்னிட்டு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக எதுவும் மெனக்கெட வேண்டாம் என இது குறித்து குறிப்பிட்டுள்ளார். 


இது குறித்து இரு தினங்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின், 'என்னுடைய 70-ஆவது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை - எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும், எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதமான அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகக் கொண்டாட வேண்டும்' என திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி தெரிவித்து இருந்தாலும் 'அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது?' என்கின்ற ரீதியில் நாளைய தினம் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திமுக தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்திக்க கூட்டமாக குவிய இருக்கிறார்கள்.  அண்ணா அறிவாலயத்தில் சென்று முதல்வரை வாழ்த்தி விட வேண்டும், அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுகவில் 65 மாவட்டங்களில் இருந்து திமுகவினர் படை திரண்டு வர தயாராக உள்ளனர். 65 மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முதல் மாவட்ட கிளைக் கழக செயலாளர்களை அனைவரும் நாளை அறிவாலயத்தை நோக்கி படையெடுக்கின்றன. 

எப்படியாவது முதல்வர் கையில் பரிசை கொடுத்துவிடவேண்டும், அவரிடம் போட்டோ எடுத்து விட வேண்டும் என்பது திமுகவினரின் நாளைய குறிக்கோளாக இருந்து வருகிறது. கொண்டாட்டங்கள் தேவையில்லை முதல்வர் ஸ்டாலின் கூறும் போது அதனை கேட்காமல் இப்படி கொண்டாட்டம் என்ற பெயரில் நாளைக்கு தமிழகம் முழுவதும் கொண்டாட விட்டனர் திமுகவினர். இதனால் தான் அரசியல் உலகில் முதல்வரின் பேச்சை திமுகவினர் கேட்பதில்லை என விமர்சனம் எழுந்து வருகிறது.

மேலும் நாளை பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ரீதியில் 2024 தேர்தலுக்கு கூட்டணி அச்சாரம் போடும் முடிவில் அகில இந்திய தலைவர்களை ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க ஏற்பாடுகளை டி.ஆர்.பாலு ஏற்று அதை செய்தும் முடித்திருக்கிறார்.  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் தொண்டர்களை அறிவாலயம் வரவைக்கும் வேலைய பார்க்குறாங்க அப்டின்னு அறிவாலய தரப்பு தகவல் தெரிவிக்கிறது.