மேற்குவங்கம் :மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலின்போது வன்முறையில் திரிணாமூல் குண்டர்களால் பலபெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க வந்த தேசிய மனித உரிமைகள் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்தேறியிருந்தது.
இந்நிலையில் மமதா பானெர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் மூன்றாவது ஆண்டை வருகிற மே 5 அன்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 4 அன்று மேற்குவங்கம் செல்லவுள்ளார். மேலும் தேர்தல்வன்முறையின் போது பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து மாநில பிஜேபி பேரணி நடத்த உள்ளது.
தேர்தல் வன்முறையின் முதல் ஆண்டை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்த பிஜேபி திட்டமிட்டுள்ளது. 10 நாட்கள் நடக்கும் இந்த பேரணியில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிஜேபி எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். மே 3 அன்று பிஜேபி தொண்டர்கள் மக்களை சந்தித்து பாதிக்கப்பட்டவர்ளுக்கு உதவி பெறுவார்கள் என கூறப்படுகிறது.
மே 7 அன்று பிஜேபி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு பணம் மற்றும் உடை வழங்குவார்கள் என மாநில பிஜேபி தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 10 அன்று கொல்கொத்தாவில் நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரதத்திற்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் பங்கேற்பார்கள்.
மேலும் இந்த நிகழ்வில் மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மமதா தனது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை கொண்டாட நினைக்கையில் அவரது ஆட்சியில் நடைபெற்ற வன்முறையை நினைவுகூறி மமதாவுக்கு பிஜேபி அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்கொத்தா தர்மசாலாவில் வன்முறை இல்லாத அரசியல் அச்சமில்லாத மேற்குவங்கம் உருவாகும்வரை பிஜேபி போராடும் என பிஜேபியினர் சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.