பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியபோது கோபம் கொண்டவர்கள் தற்போது என்ன செய்ய போகிறீர்கள் என முதல்வர் தொகுதியான கொளத்தூர் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட. செய்தியை சுட்டிக்காட்டி கடுமையாக பாய்ந்துள்ளார்,
இது குறித்து SG சூர்யா குறிப்பிட்டவை பின்வருமாறு :-கடந்த வாரம் நான் அர்னாப் கோஸ்வாமியுடன் கலந்துக்கொண்ட ஆங்கில ஊடகமான Republic தொலைகாட்சி விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குறித்து ""An incompetent Chief Minister(MK Stalin) has put the city(Chennai) to shambles!" என்று பேசியிருந்தேன். இதற்கான தமிழாக்கம் "தகுதியற்ற ஒரு முதல்வர் சென்னை நகரையே சீரழித்துவிட்டார்!"
இதற்கு சிலர் கோபித்துக் கொண்டனர். ஆனால், நான் தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த வாதத்தையும் வைப்பவனல்ல. காரணம் இல்லாமல் அப்படி சொல்லவில்லை என்பதற்கு சான்றாக மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாம்பலம் கால்வாயில் குப்பைகளை கொட்டி தி.நகர் முழுக்க மழைநீர் சென்றது போலவே பக்கிங்காம் கால்வாய் அடைக்கப்பட்டு வியாசர்பாடி, கொளத்தூர் முழுக்க வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த உண்மையை India Ahead Tamil ஊடகவியலாளர் Sandhya Ravishankar வெளிக்கொண்டு வந்துள்ளார்.
என் ஒரே கேள்வி. தமிழகத்தில் இத்தனை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் உள்ளீர்களே உங்களுக்கெல்லாம் குறைந்தபட்ச நேர்மை இருந்திருந்தால் இப்படி ஒரு தவறை செய்திருக்கும் தி.மு.க அரசை கேள்வி கேட்காமல் இருப்பீர்களா? தமிழக மக்களுக்கு வேலை செய்கின்றீர்களா இல்லை தி.மு.க-வுக்காக பணி செய்கின்றீர்களா?
ஓரு ஆங்கில தொலைகாட்சி வந்து தான் இங்கு சென்னை வீடுகளுக்கு மழை நீர் சென்றதற்கான காரணம் என்னவென்று கண்டுப்பிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய நிலைதான் இங்கு உள்ளதா? தமிழக ஊடகங்களோ "மக்கள் நீச்சல் அடிக்கின்றனர், கொடைக்கானல் போல குளு குளு என உள்ளது" என வெட்கமின்றி தமிழக அரசின் கையாலாகாததனத்தை மறைக்கும் அளவு செய்தி வெளியிட்டனரே?
என கடுமையாக சாடியுள்ளார் SG சூர்யா, அடுத்து ஒரு பெரும் மழை பெய்தால் சென்னை தாங்காது எனும் சூழலில் என்ன செய்ய போகிறது தமிழக அரசு என்ற கேள்வியே இப்போது அதிகரித்து காணப்படுகிறது.