என் சமூகத்தை என்னை வைத்தே இழிவு படுத்திவிட்டீர்களே என ஜெய்பீம் படத்திற்கு வட்டார மொழி வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வேதனை தெரிவித்துள்ளார் அத்துடன் பொய்களை பரப்பிய சூர்யா குடும்பத்திற்கு சாமி தான் கூலியை கொடுக்க வேண்டும் என மன வேதனையை கொட்டியுள்ளார் எழுத்தாளர்.
கண்மணி குணசேகரன் ஜெய்பீம் படத்திற்கு வசனம் எழுதியவர் பின்பு எதிர்ப்பு கிளம்பவே முதலில் இயக்குனர் ஜெய்பீம் என எந்த கதையும் சொல்லவில்லை எலி வேட்டை என்ற தலைப்பில் தான் கதை களம் என சொன்னார்கள், மேலும் வன்னியர்களை வில்லனாக காட்டும் படம் என எனக்கு தெரியாது அப்படி என்றால் ஏற்று கொண்டு இருக்கமாட்டேன் என படம் வெளியான சில நாட்களில் விளக்கம் அளித்தார்.
இந்த சூழலில் நேற்று நள்ளிரவில் கண்மணி குணசேகரன் தனது முகநூல் பக்கத்தில் வேதனையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அது பின்வருமாறு :-"கண்மணிகுணசேகரன்தான...?""ஆமா...""நீதான ஜெய்பீம் படத்துக்கு கதை எழுதிக் குடுத்த." "இல்ல... சும்மா வட்டார வழக்குல வசனம்." "என்னா சும்மா. இது எல்லாத்துக்கும் நீந்தான் காரணம். ஒன்ன மொதல்ல உள்ள தூக்கி போடணும்.""சரி ஒக்காரு. நீ போடற பதிவெல்லாம் படிக்கிறன்."
ஓட்டல் கடையில் மூஞ்சைக் காட்டுகிறார் முகப்பழக்கமில்லா முகநூல் நண்பர். "வூட்டுக்கே வந்துட்டாங்கன்னு எழுதிக் குடுத்தங்கறீங்க. திருநெல்வேலி பக்கம் போயி இப்பிடிக் கேட்டா எழுதிக் குடுத்துடுவாங்களா. யாரு என்னா எவடம்னு நோண்டி நொங்க எடுக்காம வுடமாட்டாங்க." என தொலைபேசியில் பொரிகிறார் தமிழ் தேசியர். "அந்த சம்பவம் நடந்தப்ப நானே போயி விஞாரணை பண்ணி அறிக்கை வெளியிட்டன். அந்த இயக்குநருக்கு வன்மையா கண்டனம் தெரிவிக்கணும். தொலைபேசி பண்ணா எடுக்க மாட்டங்கறாரு. வேற எண் குடுக்குறீங்களா."...திரும்பத் திரும்ப கூப்பிடுகிறார் புலவர் மருமகள்.
'கண்மணிகுணசேகரனைக் கேட்டால் ஐம்பதாயிரம் கொடுத்தார்கள் எழுதிக் கொடுத்தேன் என்கிறார்.' ...இணைய கட்டுரையில் நண்பரொவர்.'இந்தச் சிக்கல்ல நீனும் இருக்கன்னு இப்பதான் எனக்குத் தெரியும். அப்பிடி அந்தப் படத்துல என்னாதா நடந்துது.' ....ஆர்வமாகிறார் உடனுழைத் தொழிலாளி. "யாரு கூப்புட்டாலும் போவாம இருந்துட்டு கடைசியில இப்படி வூட்டுக்கே வந்துட்டாங்கன்னு சிக்கல்ல மாட்டிக்கிட்டிங்கள."என வேதனை படுகிறார் ...நலம் விரும்பிகளிலொருவர்.
"அய்யா ஒங்க மேல எவ்வளவு மரியாதை வைச்சிருக்கார். அவுரு கேக்கறதுக்கு மின்ன நடந்தத ஒரு வார்த்த கூப்பிட்டு சொல்லிடுங்க அதான் நல்லது." என ...உறவுக்காரரின் ஆலோசனை , இரண்டு வாரங்களாய் நெஞ்சில் கல்லை சுமக்கிறேன். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என் படைப்பை படித்தபிறகு எல்லோருமே என்மீது முன்னைய விடவும் கூடுதலாய் பிரியம் அக்கறை கொள்வர். அரிதாய் சிலர் அதுவும் நேருக்கு நேர்தான் விமர்சனம் செய்வார்கள்.
என்னை முற்றாகப் படித்தப் பிறகும் எனக்கு பழியை நினைத்து விட்டீர்கள் "ஜெய்பீம்" படக் குழுவினர்களே... தொலைபேசியிலும் நேரிலுமான விசாரிப்புகளுக்கு சிறிதும் பதற்றப்பட்டு விடாதவாறு தேய்ந்துபோன ஒலிவட்டைப் போல் திரும்பத் திரும்ப நடந்ததைச் சொல்லிச்சொல்லி மனம் உழல்கிறேன். என்னை குறுக்கால் இழுத்துப்போட்டு காராணமேயில்லாமல் பொய்யாய் புனைந்து என் சமூகத்தையே கொலைகாரர்களாய் சித்தரித்து ஒரு எதிர்மறை கதாபாத்திரத்துக்கு எனது பெயரையும் வைத்து இழிவுபடுத்தி விட்டீர்கள் பாவிகளே.என் மக்கள் முன்னாலேயே தலைகுனிந்து போகவேண்டியது எத்தனை அவலம்.
படம் ஓடிவிட்ட மதர்ப்பில் தெனாவட்டில் பதில்சொல்லி திட்டமிட்டு செய்ததை நியாயப்படுத்த எதிர்வரிசையில் இருப்போரையெல்லாம் வலிந்து அணி திரட்டி மேலும்மேலும் சூழலை பதற்றமாக்கிக் கொண்டு , தவறை ஒத்துக்கொள்ள மனிதனாக இருந்தால் போதும்.அந்த மனிதத்தன்மை இல்லாமல் என்ன பெரிய கலை, கலைஞன், மயிரு மட்டை.
உங்களுக்கெல்லாம் அந்த பார்வதி ராசாக்கண்ணு ஊரிலிருக்கிற அந்த 'முதனை செம்பையனார்'தான் நல்ல கூலியை கொடுக்க வேண்டும் என மிகவும் வேதனையாக பதிவு செய்துள்ளார் ஜெய்பீம் திரைப்படத்திற்கு வட்டார மொழி எழுதிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன்.