Cinema

ஆளுநரிடம் நடிகர் ரஜினி தெரிவித்த இரண்டு முக்கிய விஷயங்கள் என்ன?

Rn ravi,  Rajinikanth
Rn ravi, Rajinikanth

தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தது பரபரப்பை உண்டாக்கி இருந்தது அத்துடன் ஆளுநர் உடன் அரசியல் பேசியதாக ரஜினி தெரிவித்து இருந்தது பரபரப்பை உண்டாக்கி இருந்தது, இந்த சூழலில் ரஜினி ஆளுநரை சந்தித்தது ஏன்? சந்திப்பில் என்ன நடந்தது என பலரும் பல்வேறு விதமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


இதில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் பணங்கள் போன்றவை ரஜினிக்கு சொந்தமானவை என்றெல்லாம் யூகங்கள் பரவின இந்த சூழலில்தான் நடிகர் ரஜினி காந்த் ஆளுநர் சந்திப்பில் மிக முக்கியமான இரண்டு தகவல்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்போன் போன்றவை உளவு பார்க்க படுவதாக அவரது தரப்பிற்கு சந்தேகம் எழுந்துள்ளது இது குறித்து ரஜினிக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்தே ஆளுநரை செல்போன் மூலம் அழைத்து பேசாமல் நேரடியாக அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து இருக்கிறார் ரஜினி.

அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர், இந்த சூழலில் தமிழகத்தில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் நடைபெறும் ஒரு சில அழுத்தம் குறித்து விரிவாக ரஜினி எடுத்து கூறி இருக்கிறார், அரசியல் வாழ்க்கையில் விலகி இருப்பதாக அறிவித்து இருக்கிறேன் ஆனால் என்னை ஏதோ ஒரு கட்டத்தில் அரசியல் வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று ரஜினி இரண்டு விஷயங்கள் குறித்து ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மத்திய அரசு ரஜினிக்கு மேற்குவங்க ஆளுநர் பதவி கொடுக்க முன்வந்து இருந்ததாம் ஆனால் அதனை ரஜினி மறுத்து இருந்ததாக கூறப்படுகிறது, இந்த சூழலில்தான் ஏன் அந்த வாய்ப்பை தவிர்த்தேன் என ரஜினி விளக்கமாக ஆளுநர் ரவியிடம் தெரிவித்து இருக்கிறார்.

அப்போது ஆளுநர் ரவி நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அரசியலில் இருந்து ஒதுங்கினால் அது நம்மை அரசியலுக்கு உள்ளாக்கி விடும் என்று கூறி இருக்கிறார், இதையடுத்து ஆளுநர் உடன் சந்திப்பை முடித்து கொண்டு வெளியே வந்து பேட்டி கொடுத்துள்ளார் ரஜினி.

இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்.. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.அதோடு தமிழ்நாடு தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்திடம் ஆளுநர் தெரிவித்து இருக்கிறார்.

நன்மை செய்ய ரெடி என்று ஆளுநர் கூறியது ஏன்? இதன் உண்மையான அர்த்தம் என்ன? அரசியல் ரீதியான மாற்றங்களை மாற்றங்களை இது குறிக்கிறதோ என்று பலரும் ஆழ்ந்து கவனித்து வருகின்றனர்.

90களில் ரஜினிக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்று ரஜினிக்கு கடந்த காலங்களில் ஆலோசனை வழங்கிய பலர் தற்போது திமுகவின் அரசியல் ஆலோசகர்களாக இருக்கிறார்களாம், இந்த நிலையில் ரஜினிகாந்த்த்தை ஒரு தரப்பு தங்கள் தயாரிப்பு திரைப்படங்களில் தான் நடிக்க வேண்டும் தேவையான கால் சீட் கொடுக்க வேண்டும் என அன்பாக மிரட்டி வருகிறதாம்.

அத்துடன் அவரது செல் போன் பேச்சுகளும் உளவு பார்க்க படுவதாக ரஜினி தரப்பு சந்தேகம் அடைந்து இருப்பதால் ஒரு கட்டத்தில் ரஜினி அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும்  சிலரது செயல்பாடுகளே ரஜினியை அரசியலுக்குள் அழைத்து வந்துவிடும் என கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து ரஜினி பாராட்டுக்கள் தெரிவித்து இருக்கிறாராம் அத்துடன் டெல்லியில் தனது பழைய நண்பர்களை சந்தித்து ரஜினி பேசி இருக்கிறார் அதில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா காலகட்டத்தில் உடல் நிலை குன்றிய நிலையில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக தெரிவித்தது அவரை நம்பி அரசியலில் களம் இறங்கிய பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, குறிப்பாக அதிமுகவில் உள்ள பலர் ரஜினியின் பின்னால் அணிவகுக்க காத்து இருந்தனர், இந்த சூழலில் தற்போது அதிமுக இரண்டாக உடைந்துள்ள சூழலில் அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்கின்றனர் தமிழக அரசியலை நீண்ட காலமாக ஆராய்ந்து வருபவர்கள்.